உணர்வுருக்கள் (உ.த. 😀👍👏) இல்லாத வாட்ஸ்-ஆப் அரட்டைகளே இல்லை. அப்படியான இமோஜிக்களை விண்டோஸ் கணினியில் உள்ளீடு செய்ய எளிதான வசதியைப் பற்றியது இந்தப் பதிவு.

நீங்கள் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் செயலி, அது பேஸ்புக், நோட்-பேடு, வோர்ட் எதுவாக இருந்தாலும், அங்கேயே உங்கள் விசைப்பலகையில் “விண்டோஸ்” மற்றும் “புள்ளி” (அதாவது “🪟” மற்றும் “.” விசைகளைச் சேர்த்துத் தட்டினால் இமோஜி விசைப்பலகை வரிசை என்ற சிறு திரை தோன்றும். அதில் நம் எண்ணத்தை, உதாரணமாக smile, angry, sad, car என்று தேடினால், அதற்கான உணர்வுருக்கள் கீழே காட்டப்படும். நமக்கு வேண்டியதைத் தேர்வு செய்து தட்டினால், நீங்கள் இருந்த செயலியில் உணர்வுருக்கள் தானாகவே உள்ளீடு செய்யப்படும்.

இதைப் பற்றியும் இதுபோன்ற விண்டோஸ் வசதிகளைப் பற்றியும் எனது ‘நுட்பம்‘ புத்தகத்தில் (பக்கம் 256) எழுதியிருந்தேன். இன்றைக்கு எதேச்சையாகத் தெரிந்தது, இந்த இமோஜி விசைப்பலகை திரையில் தமிழிலும் தேடிப் பார்க்கலாம் என்று. அதாவது “வீடு”, “சிரிப்பு”, “அழுகை”, “தண்ணீர்” என்று நம் மொழியிலேயே உணர்வுருக்களை தேடிப்பிடிக்கலாம். இந்த தமிழில் உணர்வுருக்களை தேடுவது ஆப்பிள் ஐபோனிலும், கூகுள் ஆண்ட்ராய்டிலும் வேலை செய்கிறது.

Search for Emoji in Windows 11 in Tamil
Search for Emoji in Windows 11 in Tamil
Search for Emoji in iPhone and Android in Tamil
Search for Emoji in iPhone and Android in Tamil

#emoji #இமொஜி #தமிழ் #விண்டோஸ் #ஆண்ட்ராய்டு


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading