இந்தப் படங்களைப் பார்க்கப் பழைய நினைவுகள் வருகிறது. இரண்டாயிரத்திலிருந்து பார்த்தால் தற்போது வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவுகள் மாயாஜாலமாகத் தோன்றும். அமெரிக்காவில் அர்லாண்டோவில் நடந்த இந்த (டெக்-எடு 2000) மைக்ரோசாப்ட் மாநாட்டில் பேசப்பட்டது விண்டோஸ் 2000, விண்டோஸ் சர்வர், எக்ஸ்சேஞ்ச் சர்வர், விஷுவல் ஸ்டூடியோ மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ். அன்றைக்கு மேகக் கணினிகளை யாரும் கண்டுபிடித்திருக்கவில்லை, அதனால் மைக்ரோசாப்ட் அசூர் எல்லாம் இல்லை. இந்த மாநாட்டின் போது நான் புகழ்பெற்ற சாம்ஸ் பதிப்பகத்திற்காக மைக்ரோசாப்ட் பரிந்துரைத்து அவர்களின் ஆப்-சென்டர்2000 என்கிற சர்வர் மென்பொருளுக்கு ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தேன். இந்த அர்லாண்டோ பயணத்திற்கு முன்னர் ஓரிரு முறை தான் அமெரிக்கா சென்று அங்கே நடக்கும் பிரமாண்டத் தொழில்நுட்பக் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு மாநாட்டிலும் பத்தாயிரம் பேருக்கு மேலாக வருவார்கள், ஆச்சர்யமாக இருக்கும். எனக்குப் புதிய அனுபவமாக இருந்ததால் அப்பொழுதெல்லாம் அமெரிக்காவும் சரி, அங்கே நடக்கும் மாநாடுகளும் சரி, மைக்ரோசாப்ட் நிறுவனமும் சரி, எல்லாமே வியப்பாக இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதெல்லாம் அமெரிக்கப் பயணம் என்றாலே அவ்வளவு ஆர்வம் இல்லை, அங்கே நடக்கும் மாநாடுகளுக்கு நேரில் செல்லும் நேரமும் இல்லை, உதாரணமாகப் போன மாதம் நடந்த மைக்ரோசாப்ட் பில்டு-2024 மாநாட்டை இணையம் வழியாகவே பார்த்தேன். பெருந்தொற்றுக்குப் பின் பலரும் இப்படி இணையம் வழியாகவே பார்த்துவிடுகிறார்கள் – மிக அவசியம், பெரிய வியாபாரம் வரப் போகிறது, நாம் உரை நிகழ்த்துகிறோம், அல்லது பெரிய மனிதர்களைப் பார்க்க வேண்டும் என்றால் மட்டுமே பலரும் நேரில் செல்கிறார்கள்.
எனக்குப் பின்னால் அப்பொழுதைய மிக அதிக திறன் கொண்ட சர்வர்கள்.

எனக்குப் பின்னால் அப்பொழுதைய மிக அதிக திறன் கொண்ட சர்வர்கள்.

 
எனக்குப் பின்னால் ஆயிரக்கணக்கில் மேஜை கணினிகள், எல்லாவற்றிலும் விண்டோஸ் சர்வர் 2000 இயங்குதளம் இருக்கும், நாம் அவற்றை எந்தத் தடங்களும் இல்லாமல் பயன்படுத்திக் கற்றுக் கொள்ளலாம், வந்திருக்கும் புதிய வசதிகளை நமக்குச் சொல்லிக் கொடுக்க அருகிலேயே மைக்ரோசாப்ட் நிபுணர்கள் இருப்பார்கள்.
பயன்படுத்திக் கற்றுக் கொள்ள ஆயிரக்கணக்கில் மேஜை கணினிகள்

பயன்படுத்திக் கற்றுக் கொள்ள ஆயிரக்கணக்கில் மேஜை கணினிகள்

நான் தங்கியிருந்த ஹோட்டல், அர்லாண்டோ

நான் தங்கியிருந்த ஹோட்டல், அர்லாண்டோ


Discover more from Venkatarangan blog

Subscribe to get the latest posts to your email.

Tagged in: