
பொன்னியின் செல்வன் 2 (2023)
பொன்னியின் செல்வன் 2 இன்று ஐமாக்ஸ் பெரிய திரையில் பார்த்தாயிற்று, எனக்குப் பிடித்திருந்தது. திரைக்கதை நன்றாகவிருந்தது. ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷாவின் நடிப்பு அருமை. நடிகர் ரகுமான் இந்த வயதிலும் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார்?. இறுதி சண்டைக்காட்சி சுமார் தான், ஆனால் திரைப்பட வடிவத்தில் அவசியம். எனக்குச் சொல்ல ஒரு புகார் தான், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பின்னணி இசை வெறும் இரைச்சல், முக்கியமான காட்சிகளில் கூட வசனம் கேட்க முடியாதளவு வாத்திய இசைகளின் ஆதிக்கம், அதோடு ஒலியளவையும் குறைத்திருக்கலாம்.
பின் குறிப்பு: புத்தகத்திலிருந்து ஏன், எப்படி மாறுபட்டு இருக்கிறது என்பதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. காரணம் நான் நாவலை வாங்கினேனே தவிரப் படித்ததில்லை!
#PonniyinSelvan2 #பொன்னியின்செல்வன்

