புது செல்பேசி வாங்க முடிவு செய்துவிட்டீர்கள், ஆனால் எந்தச் செல்பேசியை வாங்குவது..? இன்று சந்தையில் வகை வகையாக, நூற்றுக்கணக்கில் செல்பேசிகள் கிடைக்கின்றன, அதில் நமக்கு ஏற்ற வகையை எப்படித் தேர்வு செய்வது என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். கடந்த ஜூலை 13 ஆம் இதழில், புதுச் செல்பேசி வாங்கியவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்திருந்தோம், இந்தக் கட்டுரை அதன் முன்பாகம் (Prequel).

செல்பேசியைத் தேர்ந்தெடுக்கும் முன் உங்களை நீங்களே இரண்டு கேள்விகள் கேட்டுப் பதில் சொல்ல வேண்டும். முதலாவது, நீங்கள் கொடுக்க விரும்பும் விலை, இது நாற்பதாயிரத்தைத் தாண்டினால் மட்டுமே ஐஃபோன் ஒரு தேர்வாக இருக்கமுடியும், அதற்குக் கீழே என்றால் ஆன்ட்ராய்ட் மட்டுமே கிடைக்கும். அவற்றில் நாம் விரும்பிய நல்ல செல்பேசியைத் தேர்வு செய்யலாம்.

இரண்டாவது கேள்வி, காமிராவா, பேட்டரியா, திரையா உங்களுக்குச் செல்பேசியில் எது முக்கியம் என்பது. எல்லாமே என்று சொல்லக்கூடாது. எந்த வகைச் செல்பேசியாக இருந்தாலும் இதில் இரண்டுதான் உங்களின் விருப்பத்திற்கு அமையும். அவை எவை என்று முடிவு செய்துவிட்டுத் தேட ஆரம்பித்தால், தேர்வு சுலபமாகும்.

இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (22 பிப்ரவரி 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

#மெட்ராஸ்பேப்பர் #ஆன்ட்ராய்ட்

Categorized in:

Tagged in:

,