நீட் தேர்வுகள் அடுத்த ஆண்டிலிருந்து கணினியில நடத்தப்படும்னு மத்திய அமைச்சர் அறிவிச்சிருக்கிறதை வரவேற்கிறேன்.
மாணவர் ஒரு நாட்டோட எதிர்காலம்ங்கிறதால இந்த விஷயத்துல அரசு மிகக் கவனமா இருந்திருக்கணும். போன வருஷங்கள்ல நடந்த குளறுபடிகள்ல இருந்தே அரசு பாடம் கத்துக்கிட்டிருக்கணும். இனியாவது தவறே இல்லாம – புள்ளியியல் அடிப்படையில மிகக் குறைந்த அளவு தவறுகள் மட்டுமே இருக்குற மாதிரி இந்தக் கணினி முறை உதவும்ங்கிற நம்பிக்கையில நான் வரவேற்கிறேன்.
சுமார் 22 லட்சம் மாணவர் எழுதுற தேர்வு இது. இந்த எண்ணிக்கையில தேர்வைப் பழைய முறையில நடத்துறதே சவால். சுமார் 1.3 கோடி மாணவர் மூணு நாளா எழுதுற சீனாவின் கைகாவோ (Gaokao) தேர்வுல மட்டும்தான் இதைவிட அதிகமான எண்ணிக்கையில மாணவர் பங்குபெறுறாங்க. தென் கொரியாவின் சூநியூங் (Suneung) தேர்வைச் சுமார் 5.5 லட்சம் மாணவர் எழுதுறாங்க.
இன்னைக்கு வரைக்கும் இதையெல்லாம் பழைய முறையிலதான் நடக்குதுன்னு இணையத்துல படிச்சுத் தெரிஞ்சுக்கிறேன். வருங்காலங்கள்ல இவற்றை இன்னும் சிறப்பா, சிக்கனமா நடத்தக் கணினி முறைக்கு மாறுறதுதான் வழிங்கிறது இந்தத் துறைப் பொறியாளரா என் கருத்து.

கணினியில நடத்துறாங்கன்றதால இது எடுத்தவுடனேயே எளிதா ஆகிடாது. அதுலயும் நிறைய பாதுகாப்பு நுட்ப சவால்கள் இருக்கு, அவற்றை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) நிச்சயம் உதவும் – இது இப்போ நமக்குக் கிடைச்சிருக்கிற வரம். அதோடு இந்த அளவுக்குக் கணினிகளை, அல்லது செல்பேசிகளை அல்லது இதுக்காகவே உருவாக்கப்படுற தட்டைக் கணிகளை (Tablets) தயாரிக்கிறது, அவற்றுக்கான செலவு இதெல்லாம் மலைக்க வைக்கும். ஆனாலும் நாட்டுல இருக்குற தலைசிறந்த ஆராய்ச்சியாளரைக் கொண்டு, கஷ்டப்பட்டு முயன்று இந்தத் தடைகளைத் தாண்டலாம்னு நினைக்கிறேன்.
எப்படி இந்தியாவுல உருவாக்கப்பட்ட இஸ்ரோ ராக்கெட்டுகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், யூபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை முறைகளும் இன்னைக்கு உலகத்துலேயே சிறந்து விளங்குதோ, அதுபோல இதுவும் ஒரு அரிய வாய்ப்புனு நினைக்கிறேன். இதைச் சிறப்பா செய்துக் காட்டினா உண்மையிலேயே இந்தியா ஒரு மென்பொருள் வல்லரசுன்னு எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது உறுதி.
இந்த விஷயத்துல என் பார்வை ஒரு பெற்றோராகவும், கணினி பொறியாளராகவுமே இருக்குன்னு தெரியப்படுத்திக்கிறேன். நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

