பொதுவாக எல்லா ஆண்டும் சென்னை தீவுத் திடலில் நடக்கும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சிக்கு சென்றுவிடுவேன். பெரியதாகப் பார்க்க அங்கே எதுவும் இருக்காது, அதே கடைகளும், தரம் குறைந்த சிற்றுண்டிகளும், சுவாரஸ்யமில்லாத அரசாங்கத்துறை அரங்குகளும் தான் இருக்கும். நான் போவது, என் அப்பா என்னைச் சிறிய வயதில் இங்கே அழைத்து வந்த நாட்களின் நினைவுகளுக்காக.

பெரியவர்கள் அனுமதி கட்டணம் ரூபாய் 40

பெரியவர்கள் அனுமதி கட்டணம் ரூபாய் 40

இன்று 47 வது பொருட்காட்சி 2022-2023க்கு சென்றிருந்தேன். என் கண்ணில் முதலில்பட்டது உணவுக் கடைகள் தான் – பாப்கார்னில் ஆரம்பித்து, பஞ்சுமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, பானிபூரி, ஜிகர்தண்டா, உருளை சுருட்டி, காலன் சூப், கார்லி பிலவர் பக்கோடா, டெல்லி அப்பளம் எனப் பல பல சிற்றுண்டிகள். ஆனால் எல்லாவற்றையும் பார்த்துப் படம் எடுத்ததோடு சரி, எதையும் வாங்கி சாப்பிடவில்லை. அங்கே விற்கப்படும் உணவின் தரம், உபயோகப்படுத்தும் நீரின் சுத்தம் எப்படியிருக்கும் என்று பயமாகவிருந்தது. அதனால் ஆரோக்கியம் கருதி எடுத்துச் சென்ற தண்ணீரைப் பருகி, ஓர் ஆவின் பனிக்கூழ் வாங்கி ரசித்துச் சாப்பிட்டுவிட்டு கடைகளை, அரசாங்கத்துறை அரங்குகளைப் பார்த்து (அதைப் பற்றிய படங்கள் அடுத்த பதிவு) வீடு திரும்பினேன்.

சிற்றுண்டிக் கடைகள்

சிற்றுண்டிக் கடைகள்

எப்போதும் போல சென்னை கூவம் நதியின் உலகப் புகழ் பெற்ற கொசுக்களுக்குப் பஞ்சமேயில்லை. கடந்த சில ஆண்டுகளாக (பெருந்தொற்றுக்கு முன்னர்) முன் யோசனையாக முழு கை சட்டை, முழு டிரவுசர், சாக்ஸ், ஷூ என்று என்னை முழுவதும் முடிக் கொண்டு செல்வதால் தப்பித்தேன். நீங்கள் சென்னைக்குப் புதிது என்றால் இந்தப் பாதுகாப்புகள் மிக அவசியம். இந்தப் பொருட்காட்சி சென்னையின் ஒரு முக்கிய அடையாளம்.

எந்த ஆண்டும் இல்லாதவகையில் கார் நிறுத்த கட்டணம் இந்த ஆண்டு ரூபாய் 120, பெரியவர்கள் அனுமதி கட்டணம் ரூபாய் 40. எல்லாம் கரோனா கால விலையேற்றம் போல!

கடைகள்

கடைகள்

போலி நகைகள்

போலி நகைகள்

போலி நகைகள், குழந்தைகள் ஷூ, காதணிகள், கை வளையல்கள்

போலி நகைகள், குழந்தைகள் ஷூ, காதணிகள், கை வளையல்கள்

வீட்டு உபயோகப் பொருள் கடைகள்

வீட்டு உபயோகப் பொருள் கடைகள்

சிறுவர் விளையாட்டு அரங்குகள், மெய்ந்நிகர் காட்சி அரங்கு

சிறுவர் விளையாட்டு அரங்குகள், மெய்ந்நிகர் காட்சி அரங்கு

கம்ப்யூட்டர் ஜோதிடம், பாண்டிச்சேரி கைவினை பொருட்கள் கண்காட்சி, டேரகோட்டா பொம்மை கடைகள்

கம்ப்யூட்டர் ஜோதிடம், பாண்டிச்சேரி கைவினை பொருட்கள் கண்காட்சி, டேரகோட்டா பொம்மை கடைகள்

அரசாங்கத்துறை அரங்குகள் வீதி

அரசாங்கத்துறை அரங்குகள் வீதி

அய்யனார், கல்வித் துறை, தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அரசினர் சித்தர் மருத்துவக் கல்லூரி அரங்கில் மூலிகைச் செடிகள்

அய்யனார், கல்வித் துறை, தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அரசினர் சித்தர் மருத்துவக் கல்லூரி அரங்கில் மூலிகைச் செடிகள்

சென்னை கூவம் நதிக்கரையில் புர்ஜ் கலீபா, பெர்ரிஸ் சக்கரம்

சென்னை கூவம் நதிக்கரையில் புர்ஜ் கலீபா, பெர்ரிஸ் சக்கரம்

அரசாங்கத்துறை அரங்குகள் - பொதுப்பணித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மருத்துவம், மீண்டும் மஞ்சப்பை, பெருநகர சென்னை மாநகராட்சி

அரசாங்கத்துறை அரங்குகள் – பொதுப்பணித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மருத்துவம், மீண்டும் மஞ்சப்பை, பெருநகர சென்னை மாநகராட்சி

சென்னை கூவம் நதிக்கரையில் புர்ஜ் கலீபா, பெர்ரிஸ் சக்கரம்

சென்னை கூவம் நதிக்கரையில் புர்ஜ் கலீபா, பெர்ரிஸ் சக்கரம்