உங்களின் செல்பேசி தகவல்களைப் பாதுக்காப்பது எப்படி? இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் எனதுக் கட்டுரை. குறைந்தபட்ச இணையப் பாதுகாப்பறிவு என்பதைப் பற்றி எழுதியுள்ளேன், அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய, எளிய ஐந்து விஷயங்கள். படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

//
பேகசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கு என்று கூகுளில் ஒரு நிமிடம் தேடிப் படியுங்கள். பிறகு இந்தக் கட்டுரைக்கு வாருங்கள். இந்த வழக்கில் உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட தொழில்நுட்பக் குழு, ஐந்து செல்பேசிகளில் மால்வேர் பதுங்கியிருக்கிறது; ஆனால் அவை பயனர்களின் கவனக் குறைவால், குறைந்தபட்ச இணைய பாதுகாப்பறிவுகூட இல்லாததால்தான் நடந்தது எனச் சொல்லியிருக்கிறது.

அது என்ன குறைந்தபட்ச இணையப் பாதுகாப்பறிவு?

லினக்ஸில் வைரஸ் வராது, ஐபோனில் இருந்து தகவல்களைத் திருட முடியாது என்பதெல்லாம் ஓரளவுக்குதான். உங்களிடம் முக்கியமான தகவல் இருக்கிறது அல்லது நீங்கள் ஒரு பெரிய பிரபலம் என்பதால், உங்களின் கருவியைக் கைதேர்ந்த வல்லுநர் குழு குறி வைத்துவிட்டால் உங்களால் செய்ய கூடியது ஒன்றும் கிடையாது.

பயமுறுத்தியது போதும். நம் கருவிகளைப் பாதுகாப்பது நம் பொறுப்பு என்பது புரிந்து விட்டது. இதற்கு நாம் என்ன செய்ய..? பள்ளிகளில் பொது அறிவு என சொல்லிக்கொடுத்தது போல், இன்று இணையப் பாதுகாப்பறிவு என்பதையும் சேர்த்துச் சொல்லித்தர வேண்டும்.

  1. கடவுச்சொல் ரகசியம்
  2. இரண்டடுக்கு உறுதிப்பாடு
  3. பாத்திரம் அறிந்து பிச்சையிடு
    4 . கடவுச்சொல் பாதுகாப்பு
    //

முழுக் கட்டுரையும் இங்கே:

களவாணிகளிடம் கவனமாக இருங்கள்!