எந்த நாட்டினர், ஆண்டிற்கு அதிகமான முறை திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள்?

உங்கள் யூகம் தவறு.

அது சீனாவும் இல்லை, இந்தியாவும் இல்லை. நீங்கள் எதிர்பாரா நாடு அது – ஐஸ்லாந்து, அவர்கள் தான் ஆண்டிற்கு 4.3 முறை திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அடுத்து, தென் கொரியாவினர்.

[Courtesy: The Economist World in Figures] Cinema attendances: total visits per person

[Courtesy: The Economist World in Figures] Cinema attendances: total visits per person

மொத்த எண்ணிக்கையில் ஆண்டிற்கு அதிகமான பேர் திரையரங்குகளுக்குச் சென்றதில் இரண்டாவது இடம் இந்தியாவிற்கு. சந்தேகமில்லாமல் முதலிடத்தில் சீனா, அவர்கள் 3.2 பில்லியன் (320 கோடி) முறை ஓர் ஆண்டிற்குச் சினிமாக்களைத் திரையரங்கில் பார்த்திருக்கிறார்கள். இந்தக் கணக்கெடுப்புகள் 2018யில் எடுத்தவை.

[Courtesy: The Economist World in Figures] Cinema attendances: total visits

[Courtesy: The Economist World in Figures] Cinema attendances: total visits

பெருந்தொற்றின் காரணத்தால் இந்த எண்ணிக்கைகள் சீனாவில் (கொரோனாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும்) மூன்றில் ஒன்றாகக் குறைந்திருக்கிறது. இந்தியாவில் 1.4 பில்லியன் (140 கோடி) என்பது 0.3 பில்லயனாகக் (30 கோடி) குறைந்திருக்கிறது.

[Courtesy: Statista 2021] Leading film markets worldwide in 2020, by the number of tickets sold (in millions).

[Courtesy: Statista 2021] Leading film markets worldwide in 2020, by the number of tickets sold (in millions).

இது ஒருபுறமிருக்க ஒ.டி.டி. (இணையவழி) நிறுவன வருவாய், ஆண்டிற்கு 20% என்று அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வளரும் என்கிறார்கள். இந்தத் துறையில் இந்தியா தான் உலகிலேயே வேகமாக வளரும் சந்தை என்றும் இத்துறையினர் சொல்கிறார்கள். 2020யில் தான் முதல் முறையாக திரையரங்கு வருவாயைவிட ஒ.டி.டி. வருவாய் அதிகமாக இருந்துள்ளது.

மேலும் படிக்க என் வலைப்பக்கம், ஆங்கிலத்தில் இங்கே.

Categorized in:

Tagged in: