Lounge,  தமிழ்

Why does MGR carry a baton in Anbe Vaa 1966 song?

எங்கோ படித்த மாதிரி இருக்கு, ஆனால் நினைவில் இல்லை.

எம்.ஜி.ஆரின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்றான, அழகிய சிம்லாவில் அவர் துள்ளிக்குதித்து ஆடும், பாடும் “புதிய வானம், புதிய பூமி” (அன்பே வா) பாடல். சில ஆண்டுகளுக்கு முன் நான் முதல் முறையாக சிம்லா சென்றப் போது பார்க்க விரும்பியது இந்த “மால் வீதி”யை (Mall Road) தான்.

Anbe Vaa - Puthiya Vaanam Song
Anbe Vaa – Puthiya Vaanam Song

இந்தப் பாடலில் புரட்சி தலைவர் கையில் ஒரு சிகப்பு பெட்டியும், கூடவே ஒரு சிறு தடியும் வைத்திருப்பார். பாடல் முழுவதும் இது இரண்டும் அவர் கையிலேயே இருக்கும். சென்னையில் இருந்து விமானத்தில் வந்து இறங்கியிருப்பார், அதனால் பெட்டி சரி, ஆனால் அந்த தடி எதற்கு? யாருக்காவது தெரியுமா?

எனக்கு கற்பனைக் காரணங்களை விட நிஜமான காரணத்தை அறிந்துக் கொள்ள விருப்பம். பாடல் முழுக்க அரசியல் நெடி வெளிப்படையாக இருக்கும், அதனால் இந்த தடி செங்கோலை குறிக்கிறதா? அல்லது நடனத்திற்கான ஒரு “நிலைகொள்ளச் செய்யும் பொருளா” (Prop)? அல்லது அந்தக் காலத்தில் இது எப்போதுமே எம்.ஜி.ஆரின் கையில் இருக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.