ஏறிக்கொண்டே போகும் கணினிப் பாகங்களின் விலை

ஏஐ வளர்ச்சியால் என்ன நடந்ததோ இல்லையோ, செல்பேசி, கணினி, கணினி பாகங்களின் விலை மாதாமாதம் ஏறிக் கொண்டே போகிறது.

ஒரே ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் சுமார் பத்தாயிரம் ரூபாயாக இருந்த கம்ப்யூட்டர் டிரைவ் இன்றைக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேலாக போய்விட்டது. சுமார் மூன்றரை மடங்கு விலை ஏற்றம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கணினி பாகங்களின் விலை மாதாமாதம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் ஏஐ தரவு மையங்களின் வளர்ச்சியால் இது மாறி விலை மாதாமாதம் ஏறிக் கொண்டே போகிறது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இப்படித்தான் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் சாம்சங் 990 PRO 1TB SSD-யின் மாதாந்திர விலைப் போக்கு (டிசம்பர் 2023 – செப்டம்பர் 2026).

Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading