அமெரிக்கால லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தண்ணீர் (Ivanhoe reservoir, LA, USA) சேமிப்பு குளம் முழுக்கக் கருப்புப் பந்துகளைப் போடுகிறார்கள் – இது அறிவியல் புதுமையாம், எல்லோரும் பாராட்டுகிறார்கள், நாமும் வாயைப்பிளந்து பார்க்கிறோம், பகிர்கிறோம்.

இந்த வீடியோவை முழுவதுமாக பாருங்கள் அவர்கள் கருப்பு பந்துகளை (shade balls) போடுவது வெறும் தண்ணீர் ஆவியாக மாறுவதை தடுப்பதற்காக இல்லை (அது பக்கவிளைவு மட்டுமே), முக்கிய காரணம் தண்ணீரின் தன்மையை (வேதியியலை) பாதுகாப்பது தான்.

இதையே நம்ம ஊர்ல வெள்ளைநிற தர்மாவால் போட்டா சிரிக்கிறோம். அது சரியாகத் திட்டமிடவில்லை தான், ஒழுங்காகச் செய்யவுமில்லை தான், இருந்தாலும் இது போன்ற முயற்சிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். அறிவியலில் தவறுகள் பல செய்தால் தான், எது சரி என்று கண்டுபிடிக்க முடியும்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் நாம் செய்யத் தவறுவது பரிசோதனைகள் தான். எதையுமே சிறிய அளவில் பரிசோதித்து, அதனால் வரும் விளைவுகளை அளந்து, ஆராய்ந்து, மாற்றி, மீண்டும் பரிசோதித்து, பின்புப் பெரிய அளவில் செய்ய வேண்டும். அதற்கான பொறுமையும், பயிற்சியும், அக்கறையும் நம்மிடத்தில் மிகக் குறைவு. இதில் அமெரிக்கர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள், அதனால் தான் அவர்கள் பெரிய அளவில் வெற்றிப் பெறுகிறார்கள்.

பின் குறிப்பு: என்றுமே எல்லா ஊரிலும் லஞ்சமிருக்கிறது. அதை இதோடு குழப்ப வேண்டாம், அது தனி விஷயம். அதில் நிறைய அரசியலிருக்கிறது, அதை விட்டுவிடுவோம். நான் பேசுவது அறிவியல் / பொறியியல் முறைகளை மட்டுமே! நன்றி!

Categorized in:

Tagged in:

,