கர்ணன் கவசக் குண்டலங்களை இழந்து வருந்தினாரா எனக்குத் தெரியாது. ஆனால் இன்று என் மடிக்கணினி (Asus ZenBook Pro UX501) பிறந்த விட்டிற்குச் சென்றிருக்கிறது, உடம்பு தேறி (அமெரிக்காவில் இருந்து உதரி பாகங்கள் வர வேண்டுமாம்), திரும்பி வர 21 நாட்கள் ஆகுமாம்,  ஒரு மண்டலமாவது ஆகும் என்பது இது போன்ற நிகழ்வுகளில் என் அனுபவம்.
 
அது வரை விண்டோஸ் இல்லாமல், அழுதுங்கொண்டே நான் (என் பழைய)ஆப்பில் ஐ-மேக்ஐ பயன்படுத்த வேண்டும்.
 
எனக்கு இது, என் வீட்டைவிட்டு என் அக்கா(க்கள்) வீட்டில் இருப்பது போன்ற உணர்வைத் தான் கொடுக்கிறது. என் அக்காக்களுக்கு என் மீது பாசம் அதிகம், அவர்கள் வீடும் என் வீடு போலத் தான்,ஆனாலும் என் வீடு இல்லேயே. என் பொருட்கள், நான் வைத்த இடத்தில்,இருக்காதே!
 
#Laptop #GoneForRepair #MissingMyPC

Categorized in:

Tagged in:

,