கம்ப்யூட்டர் கிராமம்

ஒரு சினிமா படம் பார்த்ததுப் போல இருந்தது, சுஜாதா அவர்களின் நாவலான “கம்ப்யூட்டர் கிராமம்” படித்தது. அவ்வளவு விருவிருப்பு, வேகம். கதையொன்றும் பெருசுயில்லை. ஆனால் நல்ல மண்வாசனை, இரு கொலை, கற்பழிப்பு, போலிஸ், சாமியாட்டம், திகில் எல்லாம் உண்டு.

அது 1980கள் ஏதோ ஒரு வருடம். தமிழ்நாட்டின் கடைக்கோடியில் ஒரு கிராமம், அங்கே தான் நாட்டின் தொலைக்காட்சி சேவைக்காக ஒரு சாட்டிலைட் கிரவுண்ட் செட்டப் செய்ய வேண்டி இரு பொறியாளர்கள் பம்பாயில் இருந்து வருகிறார்கள், அவர்களில் ஒருவன் புதிதாக மணமுடித்து தன் மனைவியொடு வந்திருக்கிறான். அவர்களுக்கு அளிக்கப்பட்ட அரசு நிலத்தில் ஒரு மரம், அதில் முனிஸ்வரன் சாமி இருப்பதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள் – மரத்தை எடுத்தே விட வேண்டும் என்கிறது விஞ்ஞானம்; தடுக்கிறது நம்பிக்கையைப் பயன்படுத்தும் உள்ளூர் வியாபாரிகள். இரண்டும் கைக்கோர்த்து எப்படி செல்லலாம் என்று வேடிக்கையாக சொல்கிறார் ஆசிரியர்.

வெறும் 166 பக்கங்களில் நம்மை பல மாதங்கள் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்று உலாவிடுகிறார் திரு.சுஜாதா.

Categorized in:

Tagged in:

, , ,