“காவலன்” – விஜய் நடித்துள்ள இந்தப் படத்தை இன்று சென்னை ஐநாக்ஸில் பார்த்தேன். போக்கிரிக்கு பிறகு விஜய் (Vijay) படங்கள் எல்லாமே சுமார் தான், எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. மனுஷருக்கு நல்லகாலம் இந்தப் படம் அமைந்தது (படம் வெளிவறுவதில் நடந்த அரசியலை விட்டுவிடுவோம்).

குத்துப்பாட்டுக்களோ, ராபின்ஹூட்டு கதையோ, பஞ்ச் டயலாக்குள், நம்பமுடியாத ஹீரோயிஸம் இவைத் தான் கடந்த சில விஜய் படங்களில் இருந்தவை, இவற்றையெல்லாம் கவனமாக தவிர்த்துயுள்ளார் இயக்குனர் சித்தீக், அவருக்கு அதற்கு ஒரு பாராட்டு. அழகான ஒரு காதல் கதை தான் படம். விஜய்-அசின் (Asin) பாடல் காட்சிகளில் அழகாக வருகிறார்கள், நடன அசைவுகளும் வித்தியாசமாகவும், ரசிக்கும்படியும் இருந்தது. வடிவேலின் நகைச்சுவையும் பல இடங்களில் சிரிக்கும்படி இருந்தது, Private Numberஐ பார்வதி நம்பியார் என்று அவர் படிப்பது நல்ல சிரிப்பு.  BodyGuard costume விஜய்க்கு நன்றாக பொறுந்திருந்தது, அதில் அவரின் Body Languageம் அருமை. கல்லூரிக்காட்சிகளில் வழக்கமான கெட்ட மாணவர்கள்-விஜய் மோதல்கள் இல்லை, நடன ஆசிரியரை ஒரே ஒரு அடி அடிப்பதோடு நிறுத்திக் கொண்டதற்கு படத்தின் இயக்குனருக்கு ஒரு நன்றி. க்ளைமாக்ஸ் நம்மால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தாலும்  எனக்கு பிடித்திருந்தது, தன்னை ஏமாற்றிய அசினை அவர் எப்படி ஏற்கிறார் என்று புரியவில்லை – ஆனால் மன்னிக்கலாம். மொத்தத்தில் காவலன் – நல்ல நகைச்சுவையான படம், பார்க்கலாம்.

Categorized in:

Tagged in:

,