
VA Quarter Cutting (2010)
சிவா (Shiva) நடித்த “வ குவாட்டர் கட்டிங்” படம் இன்று பார்த்தேன். சிவாவின் முந்தைய “தமிழ் படம்” எனக்கு பிடித்திருந்ததால் இந்தப் படத்திலும் நிறைய காமெடி, கிண்டல்கள் எதிர்ப்பார்த்தேன். ஆனால் இந்தப் படம் மிகச் சுமார், படம் முழுக்க ஒரே ராத்திரியில் நடக்கும் கதையில் ஏகப்பட்ட குழப்பம்-படு மொக்கையாக படம் போகிறது. கதையே இல்லாமல், படப்பிடிப்பு நடக்கும் தினங்களில் காலை எழுந்தவுடன் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு காட்சியும் எடுக்கப்பட்டதுப் போல் ஒரு எண்ணம் நமக்கு தோன்றுகிறது. இரண்டாவது பாதியில் இதற்கு மேல் எப்படி சோதப்புவார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பில் நம்மை கடைசிவரைப் பார்க்க வைக்கிறது!
படத்தைப் பற்றி இதற்கு மேல் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.

