ஆங்கிலம் வழியாகவே முழுவதும் நான் கல்விக் கற்றாலும், எனக்கு ஓர் அளவிற்கு தமிழின் மேல் ஆர்வம் இருக்கிறது என்றால் அதற்கு முழுக்காரணம் என் மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியர் (முகம்) திரு.பெ.கி.பிரபாகரன் ஐயா அவர்கள் தான்.

தி.நகரில் உள்ள சி.பி.எஸ்.இ. (C.B.S.E) பள்ளியான வேளாங்கன்னி மேல்நிலைப் பள்ளியில் (Shrine Vailankanni Senior Secondary School T.Nagar) தான் என் முழு பள்ளிப்படிப்பையும் படித்தேன் (L.K.G. to 12th standard). அப்போது எங்களுக்கு ஐந்து ஆண்டுகள் (7,9,10,11,12th Standard) தமிழ் ஆசிரியராக இருந்தவர் திரு.பெ.கி.பிரபாகரன் அவர்கள்.

பள்ளிப் படிப்பை முடித்தப்பின்(1992) ஒரிரு ஆண்டுகள் கழித்து ஐயாவை சந்தித்தோடு சரி, மீண்டும் இன்று தான் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரின் வீட்டில் (பரிதி நிலையம், 1368, ஆறாவது செக்டர், 31ஆவது தெரு, சென்னை-600078) இன்று நானும் என் பள்ளித் தோழன் கோ.மணிகண்டனும் சேர்ந்து போய் பார்த்தோம். நலம் விசாரித்தோம், பழைய கதைகள் பேசினோம். அவருக்கு நான் எங்கள் லிப்கோ நிறுவனத்தின் பேரகராதி ஒன்றைக் கொடுத்தேன், ஐயா எங்களுக்கு அவரின் “மனத்தை விட்டகலாத கவிஞர்கள்” புத்தகத்தைப் அன்பளிப்பாகக் கொடுத்தார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

Visit to Thiru Pe.Ki.Prabharakaran House 21March2010

திரு.பெ.கி.பிரபாகரன் ஐயா இல்லம்

1990ல் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் எனது ஆட்டோகிராப் புத்தகத்தில் ஐயா எழுதிக் கொடுத்ததை இன்று கண்டுப்பிடித்து படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது நெகிழ்ச்சியான நிகழ்வு:
1990 Pe.Ki.Prabhakaran Aiya in my autograph book

Categorized in:

Tagged in: