நேற்று விடுமுறை, எங்கே போவது என்று யோசனை செய்ததில்  சுட்டெரிகக்கும் கோடை வெயில் பயமுறுத்தியது. குளிர்ந்த திரையரங்கம் தான் சரி என்று முடிவு செய்து, இணையத்தில் தேடியதில் ”சத்தியம்” திரையரங்கத்தில் “சந்தோஷ் சுப்ரமண்யம்” (Santosh Subramaniam) படத்திருக்கு  சீட்டு கிடைத்தது. எவ்வளவு தேடியும் “அறை எண் 305” மற்றும் “யாரடி நீ மோகினி”க்கு இடம் கிடைக்கவில்லை. இதுவும் ஒரு வகையில் சந்தோஷமாக இருந்தது, ஒரு சில வருடங்கள் முன்பு வரை தியேட்டர் தொழிலே அழிந்துவிடும் என்ற நிலையிலிருந்து இது ஒரு நல்ல வளாச்சி. எதனால் என்று எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை – அரசாங்க வரி சலுகையாகயிருக்காலம், திருட்டு விசிடிக்கு எதிரான போலிஸ் வேட்டையாகயிருக்காலம். எனக்கு தோன்றுவது என்னவோ மக்களிடம் இப்பொழுதிருக்கும் பணப்புழக்கம் (Disposable income) மற்றும் ஒரே இடத்திலுள்ள பல சிறு திரையரங்குகள் (Multiplexes) வளர்ச்சி தான் முக்கிய காரணங்களாக.

எது எப்படியோ ஜெயம் ரவியின்  ”சந்தோஷ் சுப்ரமண்யம்” படத்திற்கு  வருவோம். படத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல், எந்த எதிர்ப்பார்பும் இல்லாமல் போனதால் ஏமாற்றமில்லை. அடிதடியில்லை, அசிங்கமான மொழிகள் இல்லை, ஆபாசம் இல்லை அதனால் குடும்பத்தொடு செல்லலாம். பாடல்கள் மோசமில்லை ஆனால் சுமார், தனியாக நகைச்சுவையென்று எதுவுமில்லை. அப்பா மகன் இடையே நடக்கும் நல்ல உணர்ச்சிவசமான கதை என்றாலும் அதிகப்படியான சினிமாதனமில்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குனர், வசனங்களும் குறைவான எதார்தமானவையாக இருந்தது.  குறிப்பாக ரவி-பிரகாஷ்ராஜ் (Prakash Raj) பேசும் கடைசிக்காட்சி அழகு. படத்தில் ஜெனிலியா (Genelia) அழகாக வருகிறார், ஆபாசமில்லை, அவரின் குறும்புகள் ரசிக்கும்படி இருக்கிறது, எனக்குப் பிடித்திருந்தது. இந்திய கிரிக்கேட் விரர் ”சடகோபன் ரமேஷ்” இதில் ஜெயம் ரவிக்கு (Jayam Ravi) அண்ணாவாக வருகிறார் – அவரின் முதல் படவாய்ப்பு என்று நினைக்கிறேன்.

"சந்தோஷ் சுப்ரமண்யம்” (Santosh Subramaniam)

“சந்தோஷ் சுப்ரமண்யம்” (Santosh Subramaniam)

படம் பார்த்துவிட்டு இணையத்தில் தேடியதில் தெரிய வந்தது:

  • ஆந்திராவில் சக்கைப் போடு போட்ட தெலுங்குப் படம் பொம்மரிலு. சித்தார்த், ஜெனிலியா, பிரகாஷ்ராஜ் தெலுங்கில் நடித்திருக்கிறார்கள். அந்தப் படத்தின் தமிழ்  ரீமேக் தான் சந்தோஷ் சுப்ரமணியம் என்று. தெலுங்கில் சித்தார்த் நடித்த இடத்தில் ஜெயம்ரவி என்பது மட்டுமே மாற்றம்.
  • படத்தின் இயக்குனர் “ராஜா” மற்றும் நாயகன் “ஜெயம் ரவி” இருவரும் தமிழில் பிரபலமான எடிட்டர் மோகன் அவர்களின் மகன்கள்.

Categorized in:

Tagged in:

, ,