Movie Review,  தமிழ்

Billa (2007)

இரண்டு வாரங்களுக்கு முன் பொங்கல் விடுமுறையில் இந்தப் படத்தை (பில்லா / Billa) சத்யம் திரையரங்கத்தில் பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் இப்படி சொல்லலாம்: “அதிக பொருட்செலவில், அழகான ஒளிபதிவில், முழுவதும் மலேசியா நாட்டில் எடுக்கப்பட்டுள்ள மிகச் சுமாரானப் படம்”.

Billa (2007
Billa (2007)

 

ரஜினி நடித்த பழையப் பில்லா படத்தை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்து உங்கள் பணத்தை மிச்சம் செய்யலாம். இயக்குனர் விஷ்ணுவரதன் ஒன்றைக்கூட மாற்றவில்லை – சுத்த ஈ அடிச்சான் காப்பி. நான் கொடுத்தக் காசுக்கு ஒரே ஆறுதல் – கறுப்பு உடையில் நயன்தாரா அழகாக வந்து போகிறார், சண்டை காட்சிகளில் வேகமாக செய்து அசத்துகிறார். எவ்வளவு யோசித்தாலும் இதைத் தவிர வேறு ஒன்றும் ஞாபகம் வரவில்லை.