
திருமுருக கிருபானந்த வாரியார்
தமிழ்நாட்டில் போன நூற்றாண்டில் வாழ்ந்த தலைச்சிறந்த இந்துமத சொற்போழிவாளர்களில், திருமுருக கிருபானந்த வாரியாருக்கு ஓரு தனியிடமுண்டு. அவரின் சொற்போழிவை நான் நேரில் கேட்டதில்லை, ஆனால் சிறுவயதில் தொலைக்காட்சியில் கேட்டதுண்டு. அவரின் எளிய நடை, அற்புதமாக பாடும் குரல் நினைவில் இருக்கிறது.
அவரின் ஒலிநாடாக்களை (Cassette) வாங்க ஆசையிருந்ததுண்டு – இந்த முறை நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தான் அவரின் ஒரிரு ஒலிதட்டுக்களை (CD) வாங்கியுள்ளேன். “சிறுவர்களுக்கு அறிவுரை” என்ற ஒலிதட்டில், வாரியார் அவருக்கேயுரிய பாணியில் மிக அழகாக சொல்லுகிறார். அந்த ஒலிதட்டின் பின் அட்டையில் நான் படித்தது – வாரியாருக்காக www.variyarswamigal.com என்ற இணையதளம் இருக்கிறது, அதில் அவரின் எல்லா ஒலிநாடாக்கள்,ஒலிதட்டுக்கள் பற்றிய விவரங்களைக் காணலாமென்றும.

