
கடந்த இரு வாரங்களில் நான் ரசித்த இரு தமிழ் வாசகங்கள்.
ஒன்று – நான் படித்தது (சக்தி விகடனில்):
வியாபாரிகளே, நிங்கள் உங்கள் கடையில்
எந்தப் படத்தை வேண்டுமானாலும் மாட்டுங்கள்
ஆனால் கலப்படம் மட்டும் வேண்டாம்
– கிருபானாந்த வாரியார்.
இரண்டு – நான் கேட்டது (Lion திரு.நடராஜன் சொல்லியது)
“நேற்று” என்பது உடைந்த மண் பானை
“நாளை” என்பது மதில் மேல் பூனை
“இன்று” என்பது அழகிய ஒர் வீனை
இந்த இரண்டு வாசகங்கள் உணர்த்தும் கருத்துக்கள் ஆழமானவை, ஆனால் சொல்லிய விதமோ எளிதானவை. இதை சிந்திக்கும் பொழுது, என்னை அரியாமலே, நான் உணர்கிறேன் “தமிழ் மொழி எத்தனை அழகானவை” என்று.

