Jamun Sorbet Candy Review
Jamun Sorbet Candy Review

எனக்கு நாவல் பழம் ரொம்ப பிடிக்கும். மத்தியப் பிரதேசம் இந்தோர் நகரில் அசல் நாவல் பழச்சாறு கிடைக்கும், மிகச் சுவையாக இருக்கும். அதே போலச் சென்னையவிலும் தேடியுள்ளேன், உண்மையான சுவையில் இதுவரை என் கண்ணில் படவில்லை.

இன்று மதிய வெயிலில் ஜில்லென்று ஏதாவது சாப்பிடலாம் என்று தேடிய போது இது கண்ணில் பட்டு வாங்கினேன். குச்சி ஐஸ் வடிவில் கிடைக்கும், நாவல் பழ பனி மிட்டாய் (Jamun sorbet candy) இது. நல்ல சுவையாக இருந்தது. சர்க்கரை கொஞ்சம் அதிகம், அதனால் நாவல் பழத்தின் புளிப்புக் கலந்த துவர்ப்பு குறைவாகத் தெரிந்தது.

பிளிங்கிட் (Blinkit) செயலியில் வாங்கினேன். இதில் பால் கிடையாது, அதனால் இதை ஐஸ்கிரீம் என்று சொல்லக்கூடாது.

நான் கடித்தபின் எடுத்த படமில்லை இது, எனக்கு வந்தபோதே உருகி, மீண்டும் கட்டியாக இப்படித்தான் வந்தது.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.

நாவல் பழ பனி மிட்டாய்
நாவல் பழ பனி மிட்டாய்

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading