I Time Traveled to the Chola Empire to Watch India’s Greatest Temple Being Built
I Time Traveled to the Chola Empire to Watch India’s Greatest Temple Being Built

What if you could witness the construction of the Brihadisvara Temple with your own eyes?
Step into 1009 CE and experience the grandeur of the Chola Empire through a cinematic AI-generated time travel vlog from ancient Thanjavur.

🏛️ Temple construction
🐘 Elephants hauling massive granite blocks
🔥 Sacred rituals by torchlight
👑 Raja Raja Chola’s royal inspection
🌅 Sunrise over the unfinished temple tower

This video is an experimental attempt. It has accuracy issues, and this is not my voice, despite my best efforts.

The video was created using AI cinematic tools, Higgsfield, Seedance 2.0, Kling 3, Nano Banana Pro, and edited in Filmora.

How I created this time travel video with AI – behind the scenes?

சில மாதங்களாக இணையத்தில் அதிகமாகப் பார்க்கப்படுவது காலப்பயணக் குறுங்காணொலிகள் (Time Travel Shorts). இந்த வகை வீடியோக்களைப் பிரபலப்படுத்தியது குளோயி வெர்சஸ் ஹிஸ்டரி (Chloe vs History) யு-ட்யூப் ஓடை. இதைப் பற்றி இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.

அந்த ஓடையைப் பார்த்த ஆர்வக் கோளாறில் நானும் ஒரு காணொலி செய்யலாம் என்று தொடங்கினேன். அப்படிச் செய்யத் தொடங்கி போன வாரம் நான் வெளியிட்டது தஞ்சாவூர் பெரிய கோயில் குறுங்காணொலி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாபெரும் கட்டடம் கட்டப்பட்ட சூழ்நிலையை ஏ.ஐ. (AI) உதவியோடு நான் சென்று பார்ப்பது போன்ற காணொலி அது.

நான் எதிர்பார்த்ததை விட இதைச் செய்வது இப்போது மிகச் சுலபமாக ஆகி இருக்கிறது. அந்த வழியைக் கீழே விவரித்திருக்கிறேன்.

How I created this time travel video with AI - behind the scenes?
How I created this time travel video with AI – behind the scenes?

1) முதலில், எந்த இடம், எந்தக் காலம் என்று யோசித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் காலத்தைப் பற்றியும், இடத்தைப் பற்றியும் இணையத்தில் நிறைய தகவல்கள் இருக்க வேண்டும், வரலாற்றுப் புத்தகங்களில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஓவியங்கள், திரைப்படங்கள் எனப் பலவும் அவற்றைப் பற்றி இருக்க வேண்டும், அப்போதுதான் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் அவற்றைப் பார்த்துப் படித்துப் பழகிக் கொண்டிருக்கும்.

2) அடுத்தது, சாதாரணமாக நுகர்வோருக்குக் கிடைக்கும் ஏ.ஐ. தளங்களில் ஒவ்வொரு காட்சியும் 10 அல்லது 20 நொடிகள் வரையே உருவாக்க முடியும். இந்தக் கட்டுப்பாட்டுக்குள் வருமாறு ஒவ்வொரு காட்சியையும் வடிவமைத்துக்கொள்ள வேண்டும். இப்படி 20 நொடிகளாகப் பல காட்சிகளைச் செய்து அவற்றை ஒட்டிச் சில நிமிடங்கள் காணொலிகளாக உருவாக்கலாம். இதைத் தாண்டித் தானாகவே உருவாக்க இருக்கும் சிறப்பு முறைகளை இங்கே விட்டுவிடுவோம்.

3) இப்படி ஒவ்வொரு காட்சியாகச் செய்ய முதலில் தேவை, ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு மாதிரிப் படம். இதை உருவாக்குவது எளிது. நம்முடைய தற்படத்தையும், கூடவே நமக்கு எந்த மாதிரியான படம் வேண்டும் என்பதை ஒரு குறிப்பாக (Prompt) எழுதிச் சாட்ஜிபிடியிடம் (ChatGPT) கொடுத்து, எப்படிப் புதிய படத்தை உருவாக்கச் சொல்லுவோமோ அதே முறையைச் செய்ய வேண்டும். இங்கே நாம் அதைவிடச் சிறந்த படங்களை உருவாக்கும் மாதிரியாகிய கூகுளின் நானோ பனானா புரோ (Nano Banana Pro) மாதிரியைப் பயன்படுத்த வேண்டும் – இது சாதாரணமாகக் கூகுள் ஜெமினி தளத்தில் கிடைப்பதில்லை.

4) அடுத்து ஒவ்வொரு காட்சியையும் ஒலி-ஒளியோடு உருவாக்க, நாம் மேலே உருவாக்கிய பட ஒவ்வொன்றாகக் கொடுத்து, அதோடு இந்தக் காட்சியில் என்ன பேச்சு வர வேண்டும், காட்சி யார் யார், எங்கே இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், எந்தச் சூழ்நிலை, காலம் என எல்லாவற்றையும் குறிப்பாக எழுத வேண்டும். எழுதியதை இதற்காக இருக்கும் சீடான்ஸ் 2.0 (Seedance 2.0) அல்லது கிளிங்க் 3 (Kling 3) காணொலி மாதிரிகளிடம் கொடுத்துக் காணொலிக் கோப்புகளைப் பெறலாம். இந்த இரண்டு மாதிரிகளும் சீனா தயாரிப்புகள்.

5) மேலே #3இல், #4இல் நாம் எழுத வேண்டிய குறிப்புகளை (Prompts) சுலபமாக எழுத, சாட்ஜிபிடி சந்தா இருந்தால், “Explore GPTs” என்கிற திரைக்குச் சென்று, “Time Travel Vlog By aicenturies.com” என்கிற வசதியைத் தேர்வு செய்யுங்கள். அதில் நீங்கள் காலப்பயணம் போக விரும்பும் காலத்தையும், இடத்தையும் மட்டும் சொன்னால் அதுவாகவே ஐந்து படங்களுக்கான குறிப்புகளையும், காணொலிகளை உருவாக்கத் தேவையான ஐந்து குறிப்புகளையும் அதுவே எழுதிக் கொடுத்துவிடும். நீங்கள் ஒருமுறை படித்துப் பார்த்துச் சரி செய்துகொள்ளலாம். என்னுடைய பெரிய கோயில் குறுங்காணொலியை உருவாக்கத் தேவையான பத்து குறிப்புகளை இதன் மூலமாகவே சில நிமிடங்களில் எழுதி வாங்கிக்கொண்டேன்.

6) மேலே #3இல், #4இல் சொன்ன மாதிரிகளைப் பயன்படுத்த எளிதான வழி, higgsfield.ai (ஹிக்ஸ்பீல்டு) என்கிற தளம். இதைப் போன்ற இன்னொரு தளம் openart.ai. நான் பயன்படுத்தியது முதலாவதை. நான் எடுத்திருந்தது மாதத்திற்கு $50 என்கிற சந்தாவை, அதில் பாதி இந்த ஒரு காணொலி செய்ததிலேயே தீர்ந்துவிட்டது. அதாவது, என்னுடைய ஒரு நிமிடத் தஞ்சாவூர் கோயில் காணொலியை உருவாக்க எனக்கு $25 செலவானது (சுமார் ரூபாய் 2500).

7) நான் முதலில் பயன்படுத்தியது கிளிங்க் 3 காணொலி மாதிரியை. நல்ல தத்ரூபமாகவும், துல்லியமாகவும் காட்சிகளை அது உருவாக்கினாலும், பேச்சில் – அதுவும் இந்திய ஆங்கில உச்சரிப்பில் – சொதப்பியது. நான் பேசுவது போலவே இல்லை, யாரோ பிரிட்டிஷ்காரன் குரல் மாதிரி இருந்தது. நம்முடைய சொந்தக் குரலில் ஓரிரு நிமிடங்கள் பேசிப் பதிவு செய்தால், ஹிக்ஸ்பீல்டு தளத்தில் இருக்கும் பேச்சு மாதிரிகள், நாம் கொடுக்கும் வரிகளுக்கு நம் குரலிலேயே பேசிக் கொடுக்கும். இதைப் பயன்படுத்தி முயன்று பார்த்தேன். ஏற்கனவே வந்த காணொலியில் இருக்கும் உதட்டசைவிற்கும் இதில் வரும் வசனமும் ஒத்துப் போகவே இல்லை.

8) அதனால் அதிகத் தவறாக ஒலி வந்த இரண்டு காட்சிகளை மட்டும், சீடான்ஸ் மாதிரியைக் கொண்டு உருவாக்கினேன். இந்த மாதிரிக்கு நாம் #7இல் உருவாக்கிய ஒலிக் கோப்புகளைக் கொடுத்தால் அது ஓரளவு உதட்டசைவு ஒத்துப் போகச் செய்து காணொலியை உருவாக்கிக் கொடுக்கிறது.

9) இறுதியாக, கிளிங்க் கொண்டு உருவாக்கிய மூன்று காட்சித் துண்டுகளையும், சீடான்ஸ் கொண்டு உருவாக்கிய இரண்டு காட்சித் துண்டுகளையும், காணொலித் தொகுப்புச் (Video Editing) செயலியான பிலிமோராவில் (Wondershare Filmora) கொண்டு வந்து ஒட்டி, ஒவ்வொரு காட்சி மாறுதலுக்கும் ஒரு நிலைமாற்றத்தைச் (Transition) சேர்த்தேன். இறுதியாக முதல் காட்சியில் ஒரு வரியைச் சேர்த்து, காணொலிக் கோப்பாகச் சேமித்தேன். அவ்வளவுதான்.

இதை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை செய்ய சுமார் இரண்டிலிருந்து மூன்று மணி நேரமானது. அடுத்த முறை செய்யும்போது இன்னும் வேகமாகச் செய்ய முடியும். ஆனால் ஒவ்வொரு முறையும் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாகும், அதனால் யோசித்துச் செய்ய வேண்டும்.

மேலே நான் சொன்னது ஒரு முறையே, யு-ட்யூப்பில் பல செயல்முறை விளக்கங்கள் வருகின்றன; பார்த்துப் பொறுமையாகச் செய்து பாருங்கள். அதிகமான டாலர்கள் செலவானால் நான் பொறுப்பில்லை.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading