பல சமயங்களில் எனக்கே தெரியாமல் நான் மனதிற்குள் பாடிக் கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று.
1992-இல் வெளிவந்த “வண்ண வண்ண பூக்கள்” படத்தில் வரும் “கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி” என்ற பாடல்.
இளையராஜாவின் எழுத்தில், அவரது மயக்கும் குரலில் அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் உடனே அமைதியாகிவிட்டதாக உணர்வேன். அதுவும் “இன்னும் என்னை வெகுதூரம் கூட்டிச் செல்லடி” என்று வரும் வரிகள் என்னை யாரோ அன்பாகத் தடவிக் கொடுப்பது போல இருக்கும்.
படம் வெளிவந்தபோது நான் பன்னிரண்டாம் வகுப்பு இறுதிப் பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பாடல் இன்றும் என் நினைவில் இருப்பதற்கு அந்த வயது காரணமாக இருக்கலாம். அதோடு பாடல் காட்சியில் திரு பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில் வரும் அந்த அழகான காட்டுப் பகுதியும் கூட காரணமாக இருக்கலாம்.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

