ஏ.ஐ. விசயத்தில் சீனாவில் நடப்பதை நம்பவே முடியவில்லை. அங்கே செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இந்தளவுக்குக் கூட இருக்குமா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக ட்விட்டரில் இதே பேச்சாகவே இருக்கிறது.

நம்மூரில் வாட்ஸ்-ஆப் (WhatsApp) மாதிரி, ஆனால் அதைவிடச் சிறந்த செயலி வி-சாட் (WeChat). இது சீனாவில் மிக மிகப்பிரபலம். அந்த நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை இந்தச் செயலி பயன்படுத்தப்படுகிறது. இதை இயக்கும் நிறுவனம் டேன்-சென்ட் (Tencent). கடந்த சில தினங்களாக இவர்களின் யுவான்பாவ் (Yuanbao) என்னும் செய்யறிவு பேசுசெயலியை (Chatbot) பயன்படுத்தச் சொல்லித்தரும் பயிற்சி வகுப்புகளை எடுத்துள்ளார்கள். சீனாவின் பல நகரங்களில் சுமார் இருநூறுக்கும் அதிகமான இலவச பயிற்சி அரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தச் செய்யறிவு பயிற்சி வகுப்புகளில் எட்டு வயதுப் பள்ளி மாணவர்களில் தொடங்கி வயதானவர்கள் வரை வந்துள்ளார்கள். முக்கியமாக அதிகளவில் அறுபதிலிருந்து எண்பது வயது வரை உள்ள முதியவர்கள் கற்றுக் கொண்டுள்ளார்கள். இவர்கள் ஆர்வமாகக் கற்றது என்னவென்று பார்த்தால்: படங்களை எப்படி மெருகேற்றுவது, அழகான காணொலிகளை (Videos) செய்யறிவைக் கொண்டு எப்படி உருவாக்குவது, கவிதை எழுதுவது எப்படி, இணைய மோசடிகளைக் கண்டுகொள்வது எப்படி, செல்பேசியைப் பயன்படுத்துவதில் வரும் சிக்கல்களை எப்படிக் கையாள்வது போன்றவைதான்.

இதில் என்ன ஆச்சரியம் என்றா கேட்கிறீர்கள்?

இவர்களில் பலரும் யுவான்பாவ் தாண்டி ஓபன் கிளாவைப் (OpenClaw) எப்படி நிறுவிக் கொள்வது, அதைப் எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுள்ளார்கள். இந்த ஓபன் கிளா என்பது நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளை வைத்தே காரியங்களை முடிக்கும் ஒரு திறமூல தானியங்கிச் செய்யறிவு முகவர் (AI Agent) ஆகும். இதைப் பற்றி விளக்கமாகச் சில வாரங்களுக்கு முன்னர் நாம் சேப்பியன் ஜீனோவில் பேசி இருந்தோம் (காணொலி இணைப்பு).

சீனாவில் இந்த ஓபன் கிளா மோகம் இதோடு நிற்கவில்லை. அந்த நாட்டின் மிகப் பெரிய வணிக நகரமான ஷேன்சேன் (Shenzhen) மாநகராட்சி இதைத் பொதுமக்கள் பயன்பாட்டுச் சேவையாக வழங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறதாம்.

நானே இந்த ஓபன் கிளாவை எனது கணினியில் நேரடியாகப் பயன்படுத்தத் தயங்கிக் கொண்டிருக்கும் போது, சீனாவில் இப்படிப் பெருசுகளும், நகராட்சிகளும் போட்டுத் தாக்குவதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது!!!


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading