கடந்த சில மாதங்களாக மிகவும் பிரபலமாகியிருக்கும் திறமூல (ஓபன் சோர்ஸ்) செயலி ஓபன்க்ளா (OpenClaw). இதற்கு கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் விருப்பக்குறிகள்.
இதிலிருந்துதான் ‘மொல்டுபுக்’ (Moltbook) என்ற செய்யறிவுகளின் (AI) சமூக வலைத்தளம் உருவானது. அதன் செயல்முறை பற்றி முன்பு வெளியிட்ட காணொலியில் பேசினோம். இப்போது கதையில் புதிய திருப்பம்!
இந்த ஓபன்க்ளாவை உருவாக்கியவர் பீட்டர் ஸ்டைன்பெர்கர். இப்போது அவர் எங்கே தெரியுமா? நேராக ஓபன்-ஏஐ (OpenAI) நிறுவனத்தில்!
ஒரு திறமூல திட்டம் வைரலாகிறது; அதன் உருவாக்குநர் உலகின் மிகப்பெரிய ஏ.ஐ. நிறுவனத்திற்குள் செல்கிறார். இது வெறும் வேலை மாற்றமா? அல்லது அடுத்தகட்ட ஏ.ஐ. உதவியாளர்களின் (ஏஜெண்ட்) போர் ஆரம்பமா? இந்த நிகழ்வைப் பற்றியே கீழே இருக்கும் காணொலியில் விவாதிக்கிறோம்.
இதனால் உங்களுக்கு என்ன பயன்? மின்னஞ்சல் அனுப்புவது முதல் டிக்கெட் பதிவு செய்வது வரை, அன்றாட டிஜிட்டல் வேலைகளை முழுவதும் ஏ.ஐ. ஏற்றுக்கொள்ளும் நாளுக்கு இது இன்னொரு படியா?
காணொலியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

