India AI Impact Summit 2026
India AI Impact Summit 2026

இன்றைக்கு நானும் நண்பர் ஷான் கருப்புசாமியும் இணைந்து இந்தியா ஏஐ உச்சி மாநாடு (India AI Summit) குறித்து ஒரு விரிவான காணொலியை சேப்பியன் ஜீனோவிற்காகச் செய்திருக்கிறோம்.

அதன் தொகுப்பு:

இலக்கை அடைந்ததா இந்த உச்சி மாநாடு?

கூட்டம் கூடியது, மின்விளக்குகள் மின்னின. ஆனால், வெறும் ‘கண்காட்சி’ மட்டும்தானா? அல்லது இந்தியாவின் செய்யறிவு (AI) கனவுகளுக்கு இது உயிர் கொடுத்ததா?

பிரதமரின் MANAV கட்டகம் (Framework):

பிரதமர் அறிவித்த ‘MANAV’ (சமஸ்கிருதத்தில் மனிதன்) என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது ஒரு தொலைநோக்குப் பார்வை. அதன் விரிவாக்கம் இதோ:

  • M – Moral and Ethical Systems (அறம் மற்றும் ஒழுக்க நெறிமுறைகள்)
  • A – Accountable Governance (பொறுப்பான ஆளுமை)
  • N – National Sovereignty (தேசிய இறையாண்மை)
  • A – Accessible and Inclusive Technology (எல்லோருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் தொழில்நுட்பம்)
  • V – Valid and Legitimate Systems (சரியான மற்றும் சட்டபூர்வமான கட்டகங்கள்)

ஏஐ தாக்க வழக்கு தரவுகள் (AI Impact Casebooks):

இந்த உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட 6 முக்கிய பனுவல்கள் (Casebooks) ஓர் ‘அறிவு வைப்பகம்’ (Knowledge Repository) போன்றவை. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா. சபையின் பெண்கள் துறை போன்ற உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்து 170-க்கும் மேற்பட்ட ஏஐ கண்டுபிடிப்புகளை இது பட்டியலிடுகிறது. மேலும் விவரங்கள் இங்கே.

அமெரிக்காவின் பாக்ஸ் சிலிக்காவில் (Pax Silica) இந்தியாவும் இணைந்தது:
இந்தியாவும் அமெரிக்காவும் ‘Pax Silica’ என்ற பெயரில் கைகோர்ப்பது உலக அரசியலில் மிக முக்கியமானது.

திற மூல மாதிரிகள் (Open Models) புறக்கணிக்கப்படுகின்றனவா?
அமெரிக்கப் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கம்பளம் விரிக்கும் நாம், சீனாவின் திறந்த, திற மூல மாதிரிகளை ஏன் கண்டு கொள்வதில்லை என்ற விமர்சனத்தையும் நாங்கள் முன்வைத்தோம்.

இந்தியாவின் சொந்த ஏஐ மாதிரிகள் (Sovereign AI Models):

  • Sarvam AI: 105B மற்றும் 30B அளவுருக்கள் கொண்ட, இந்தியத் தரவுகளில் மட்டுமே பயின்ற மாதிரிகள்.
  • BharatGen: மத்திய அரசின் 17 பில்லியன் அளவுருக்கள் கொண்ட இந்திய மொழிகளுக்கான மாதிரி.
  • Gnani.ai: குறைந்த இணைய வசதியிலும் இயங்கும் 12 இந்திய மொழிகளுக்கான ஒலி மாதிரி (Voice Model).

பெருநிறுவனங்களின் ஆட்டம்:

  • டிசிஎஸ் (TCS) – ஓபன் ஏஐ (OpenAI) கூட்டணி,
  • இன்போசிஸ் – ஆன்ந்த்ரோபிக் கூட்டணி,
  • ரிலையன்ஸ் ஜியோ ஜாம்நகரில் அமைக்கவுள்ள 150MW பசுமை ஆற்றல் தரவு மையம் (Data Center) வரை பல அதிரடி அறிவிப்புகள் பற்றிய சுருக்கமான விவரங்கள்.

நந்தன் நிலேகனியின் எச்சரிக்கை:

இன்போசிஸ் தலைவர் நந்தன் நிலேகனி ‘ஏஐ பரவல்’ (AI Diffusion) பற்றிப் பேசினார். 2030-க்குள் ‘100 ஏஐ பாதைகள்’ (100 AI Pathways by 2030) என்ற திட்டத்தை அவர் அறிவித்துள்ளார்.

சரியான முறையில் செயற்கை நுண்ணறிவுப் பரவலாக்களைக் கையாளாவிட்டால், உலகமயமாக்கலுக்கு எதிராகத் தொழிலாளர்கள் புரட்சி செய்தது போல, அலுவலகப் பணியாளர்கள் (White-collar workers) ஏஐ-க்கு எதிராகப் புரட்சி செய்வார்கள் என்ற அவரது எச்சரிக்கை மிக முக்கியமானது.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading