சில நாட்களுக்கு முன்னர், டின்னருக்கு என்னை வைத்து வீட்டில் ஒரு பரிசோதனை செய்யப்பட்டது.

“ஆரோக்கியமாகச் சாப்பிட வேண்டும்” என்ற என் நச்சரிப்புப் பொறுக்காமல், என் அன்பிற்குரியவளால் எனக்குக் கொடுக்கப்பட்ட இரவு உணவு இது. வேகவைத்த காய்கறிகளையும், ‘பீட்டா பிரட்’டை (Pita Bread) சுட வைத்து, “இன்று இதுதான் இரவு உணவு” என்று சொல்லப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த அரைவேக்காடான பீட்டா பிரட் கடையிலிருந்து வாங்கியதுதான். ஆனால் அதைத் தோசைக்கல்லில் போட்டு எடுத்தபோது வந்த அந்தத் தீய்ந்த அடையாளங்கள். கூடவே வீட்டில் ஆவியில் வேகவைத்த கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் காலிஃபிளவர் எனத் தட்டு ஒரு பச்சைக் காய்கறிக் கடை போலவே காட்சியளித்தது.

உண்மையைச் சொல்லப்போனால், முதலில் இது எப்படி இருக்குமோ என்று பயமாகத்தான் இருந்தது; ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. எனது மைண்ட் வாய்ஸைப் புரிந்துகொண்டு, “கொஞ்சம் கொண்டைக்கடலை ஹம்முஸும் (Hummus) இருக்கிறது” என்று எனக்குக் கறாராகச் சொல்லப்பட்டது. அதன் உள்ளர்த்தம் எனக்குப் புரிந்தது!

சரி, நடப்பது நடக்கட்டும் என்று இஷ்ட தெய்வத்தை வேண்டி, கொஞ்சம் உப்பு, கொஞ்சம் ஒரேகானோ வாசனைத் தூளை (Oregano Seasoning) தூவி ஒரு வாய் எடுத்துச் சுவைத்தேன். என்ன ஆச்சரியம்! முதல் வாயிலேயே பீட்டா பிரட்டும் அந்தக் காய்கறி கலவையும் சேர்ந்து வாய்க்குள் ஒரு ‘நடனமே’ ஆடியது.

நான் எதிர்பார்த்ததைவிடச் சுவையாகவே இருந்தது – அல்லது அந்தளவுக்கு ஒரேகானோ வாசனைத் தூளை நான் தூவியிருக்க வேண்டும்! கடைசியில், அந்த ஹம்முஸைத் தொடக்கூடத் தேவையில்லாமல் போய்விட்டது.

சமைக்கப்பட்ட (Ready to Heat) பீட்டா பிரட் இப்போது எல்லாத் துரித வணிகச் செயலிகளிலும் கிடைக்கிறது.

ஆரோக்கியமான, எளிதாக ஜீரணமாகும் இரவு உணவு இது; நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!

#ஆரோக்கியம் #pitabread #வீட்டுச்சமையல் #சுவை #இரவுஉணவு #dinner


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading