Chennai Double-decker bus at Island Grounds
Chennai Double-decker bus at Island Grounds

தமிழகச் சுற்றுலாத் துறை புதிதாக வாங்கியுள்ள மாடிப் பேருந்தில் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்தத் தகவல்.

சென்னைத் தீவுத் திடலில் நடைபெறும் 50-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சி 2026-இல் தினமும் மாலை சில மணி நேரங்கள் இந்தப் பேருந்து இயக்கப்படுகிறது. இருபது நிமிடப் பயணமாக கடற்கரைச் சாலையில் பயணித்து மீண்டும் தீவுத் திடலுக்கு வந்துவிடலாம். கட்டணம் ரூபாய் ஐம்பது.

முன்பு சுற்றுலாப் பொருட்காட்சியில் தீவுத் திடலின் உள்ளேயே சுற்றி வரும் இரயில் பயணம் (Toy Train) இருக்கும். நான் குழந்தையாக இருந்த போது எனது தந்தையைத் தொந்தரவு செய்து போய் இருக்கிறேன். இரயிலில் இருந்து அரசு அரங்குகளைப் பார்ப்பது ஏதோ வெளிநாட்டுப் பயணம் போல உணர்ந்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இரயில் பயணம் நிறுத்தப்பட்டுவிட்டது போல. அதற்குப் பதிலாகக் குழந்தையரை மகிழ்விக்க இந்த மாடிப் பேருந்து வந்திருப்பது நல்ல முயற்சி.

Chennai Double-decker bus at Island Grounds
Chennai Double-decker bus at Island Grounds
தமிழகச் சுற்றுலாத் துறை புதிதாக வாங்கியுள்ள மாடிப் பேருந்து
தமிழகச் சுற்றுலாத் துறை புதிதாக வாங்கியுள்ள மாடிப் பேருந்து

நேற்று நானும் நண்பரும் சென்ற போது நிறையக் குடும்பத்தினர் தங்களின் பெற்றோர், குழந்தையரோடு பேருந்தில் ரசித்துப் பயணித்ததைப் பார்க்க முடிந்தது. மகிழ்ச்சி.

குறிப்பு: அமெரிக்கத் தமிழர் வழங்கிய நன்கொடையில் இந்தப் பேருந்து வாங்கப்பட்டது என்று எழுதியிருக்கிறது. அமெரிக்கத் தமிழருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading