ஒரு ஏமாளியிடம் சென்ட்ரல் ஸ்டேஷனை (Central Station) விற்றுவிடுவார் நாயகன். வாங்கியவனை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு முன்னால் போய், “இந்தக் கட்டடம் என்னுது” என்று கத்த வேண்டும் என்று சொல்லுவார்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வந்த நாடகமான எஸ்.வி.சேகர் அவர்களின் “காட்டுல மழை“யில் வந்த நகைச்சுவைக் காட்சி இது. அப்போது மிக பிரபலமான வசனம்.
வேடிக்கையாகச் சொன்ன வசனம், இப்போது நிஜத்தில் நடக்கிறது :-) :-).
27 ஜனவரி 2026 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வந்துள்ள செய்தி:
நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல்-1 (Terminal-1) வருகைப் பகுதியில், டிரான்சிட் (Transit) விமானப் பயணிகள் செல்லக் கூடிய கேட் எண் 103 அருகே சுமார் 25 வயது இளைஞர் ஒருவர் சந்தேகப்படும் விதத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த இளைஞர் விமான நிலையத்தையே விலைக்கு வாங்க இருப்பதாகவும், அதற்காக விமான நிலையத்தைப் பார்வையிட உள்ளே வந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
குறிப்பு: நாடகத்தை உருவாக்கிய திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கும் அவரின் குழுவிற்கும் மிக்க நன்றி 🙏.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

