Health Advisory shown before every Tamil movie screening

Health Advisory shown before a Tamil Cinema screening
Health Advisory shown before a Tamil Cinema screening

வாரவாரம் திரையரங்கில் சினிமா பார்க்கும் எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு ஐயம்.

ஏன் தமிழ் திரைப்படங்கள் தொடங்கும் முன்னர் ஆங்கிலத்திலும் உடல் நல அபாய எச்சரிக்கைகள் வாசிக்கப்படுகின்றன?

தமிழோடு ஆங்கிலத்திலும் எழுதியிருப்பதைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. அது சட்டமாகக் கூட இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. நான் கேட்பது ஏன் ஆங்கிலத்திலும் படத்தில் நடித்திருக்கும் முக்கிய நடிகர் அல்லது நடிகை படிக்கிறார்? தமிழ் படத்தில் தமிழில் வாசித்தால் போதாதா?

ஒரு கிளை ஐயம்: எதற்காக இவ்வளவு எச்சரிக்கைகள்? அடுத்த சில ஆண்டுகளில் “சர்க்கரையைக் குறைக்கவும்” என்று ஒன்று வரலாம், “பாதுகாப்பில்லா உறவு அபாயம்” என்று வரலாம். இப்படிச் சேர்த்துக் கொண்டே போனால் சினிமா எப்போது தொடங்கும்? வேண்டவே வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏதாவது இரண்டைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லலாமே?

பின்குறிப்பு: இதைப் பற்றி கூகுள் ஜெமினி செய்யறிவிடம் (AI) கேட்டேன், அது சொல்லியது: “உலகிலேயே இத்தகைய கடுமையான சுகாதார எச்சரிக்கை விதிமுறைகளை சினிமா மற்றும் இணையவழித் திரையிடல்களில் (OTT) அமல்படுத்தியுள்ள ஒரே நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.” இது ஒருவிதத்தில் பெருமையாக இருக்கிறது, இன்னொரு விதத்தில் எந்தளவு காலனிய அடக்குமுறை/மேற்பார்வை/தலையிடு சட்டங்களை நம் அரசுகள் இன்னும் பிடித்துக் கொண்டுள்ளன என வருத்தமாகவும் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading