இன்று காலை பார்த்தது.
வீடுகளில் அலுவலகங்களில் தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை கொண்டாட்டத்தைப் பார்த்திருப்போம். இடிக்கப்பட்டு புதுக் கட்டிடம் கட்ட தொடங்காத நிலையிலும் இங்கே பூஜை ஏற்பாடுகள் தொடங்கிவிட்டது. வலது பக்கத்தில், நடுவில் மேஜையில் சாமிப் படம் இருப்பதைப் பார்க்கலாம்.

மற்ற பூஜைகளைப் போலில்லாமல் ஆயுத பூஜையின் வித்தியாசமாக நான் பார்ப்பது – இந்தப் பூஜையில் பல இடங்களில் ஸ்லோகப் புத்தகம் இல்லையென்றாலும், மந்திரம் தெரிந்தவர் இல்லையென்றாலும் பூஜை நடக்கும். அந்த இடத்தில் பயன்படுத்தும் முக்கிய பொருட்கள், இயந்திரங்கள் இருக்கும். அங்கே இருப்பதிலேயே வயதில் மூத்தவர் அல்லது மதிக்கப்படுபவர் கையில் கற்புரத்தட்டுக் கொடுக்கப்படும், அவருக்குத் தெரிந்தவரை அவர் ஆரத்தி எடுப்பார், சாமிப் படத்திற்கு பூ போடுவார், மனதார அங்கே இருக்கும் அனைவரும் தொழிலும் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். கூடி இருக்கும் பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் கூட அதே போல பூ போட்டு வணங்குவார்கள் – அவரவர் தெய்வங்களை மனதில் நினைத்துக் கொள்வார்கள்.
பெருந்தொற்றைத் தொடர்ந்து மனிதர்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு வித மன அழுத்தத்திலேயே இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த நிலையில் நம்பிக்கை தரும் எந்தச் சடங்கும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும். வரும் நாட்களில் எந்தத் தீங்கும் கெடுதலும் தங்களிடம் அண்டாது, நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பூஜை செய்வோர் மனத்தில் இருக்கும். நம்பிக்கையே வாழ்க்கை!
அனைவருக்கும் ஸ்ரீ சரஸ்வதி பூஜை திருநாள் வாழ்த்துகள்.
லோக சமஸ்தா சுகிநோ பவந்து!
[கடைசி வரியின் பொருள் “உலகம் முழுவதும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கட்டும்”]
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

