இன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் பல கடைகளில் போளி கிடைத்தாலும், இந்த இனிப்பை முதலில் பிரபலப்படுத்தியது இந்தச் சிறிய கடை தான். பெயர்: வேங்கடரமணா போளி ஸ்டால். தம்பையா ரெட்டி தெருவில் துரைசாமி சுரங்கப்பாதையிலிருந்து வரும் போது எஸ்.ஆர்.ஆம். மருத்துவமனையைத் தாண்டி, ஜூபிலி சாலை சந்திப்பைத் தாண்டி வந்தால் வலதுபுறம் இருக்கிறது.
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் முதலில் போளியைப் பிரபலப்படுத்தியது வேங்கடரமணா போளி ஸ்டால். ஆனால் இன்றும் சிறிய கடையாகவே இருக்கிறார்கள். முன்பெல்லாம் மாலை மூன்று நான்கு மணியளவில் கூட்டம் அலைமோதும், அதனால் இவர்களிடம் வாடிக்கையாளர் கவனிப்பு எப்போதும் சுமார் தான்.
போன வாரம் ஞாயிறு இந்த வழியில் வந்தபோது பல ஆண்டுகள் கழித்து, இவர்களிடம் மாலையில் சாப்பிடப் பலகாரங்களை வாங்கினேன். அங்கே அமர்ந்து சாப்பிட இடம் கிடையாது, தெரு ஓரமாகக் கடையின் முன்னர் நின்றுகொண்டு சாப்பிட வேண்டும். விலை குறைவாகவே இருந்தது. நான் வாங்கிய வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, மசால் வடை ஒவ்வொன்றும் சுமார் 11.50 ரூபாய் (வரி தனி); பருப்பு போளி விலை 14.50 ரூபாய் (வரி தனி) – சரியான பைசா நினைவில் இல்லை. வாங்கிய பொட்டலத்தை வீட்டிற்கு வந்து தட்டில் வைத்துச் சாப்பிட்டேன். சுவை நன்றாக இருந்தது, அருமை என்றெல்லாம் சொல்ல முடியாது. இந்த வழி வந்தால் சுவைத்துப் பார்க்கவும். எண்ணெய் அதிகமாகவே இருக்கும், பார்த்து அளவாகச் சாப்பிடவும். உடனிருப்பவர்களுக்குப் பகிர்ந்து சாப்பிடலாம்.



எஸ்.ஆர்.ஆம். மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் இன்னொரு கடை வெங்கடேஷ்வரா போளி நிலையம் அவர்கள் வேறு மேலே நான் சொன்ன வேங்கடரமணா போளி ஸ்டால் வேறு.
பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.


சூப்பர் ஸ்டார் கூட தனது கார் டிரைவரை அனுப்பி இக்கடையிலிருந்து வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார் என எதிலோ என்றோ படித்திருக்கிறேன்.
சிலர் குறிப்பிட்டுள்ளது போல…என்னதான்வாடிக்கையாளராக தொடர்ந்து கடைக்கு சென்று வாங்கினாலும்… இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் திரு கௌதம்கம்பீரைப் போன்றே “உம்” மென்றிருக்கும் ஊழியர்களும் சரி முதலாளியும் சரி. ஒரு புன்சிரிப்பு ..வாங்க. சார் வாங்கம்மான்னு ஒரிரு வார்த்தை..ஊஹும். பொருள் நல்லாயிருக்கு.. அதுபோதும்.
இங்குதான் ஒரு காலத்தில் மறைந்த திரைப்பட நடிகர் திரு.டில்லி கணேஷ் பலகாரங்கள் வாங்கி செல்வார்கள்
Thanks for the post. My favourite shop since mid 80’s. Have tasted all of their delicacies since my West Mambalam days and continue to do having moved to Nanganallur. Yes. Their quality has certainly come down and i do agree that their customer service is ‘pretty poor’.
Very vividly remember the days when their (the present owners’) father Sri. Krishnamurthi Iyer managed the ‘Shop’.
I tasted சுசியம் (சுய்யம் / சுசீயம்?) first in their shop. While சுசியம் was priced at 60P, the rest of the snacks (Bonda, Bajji varieties, Medu Pakoda (sad to see people call it Medu Bonda these days), Vadais (Ulundu and Masal), etc.)were priced at 50P, then.
அண்ணா நகரில் மெட்ரோ ஸ்டேஷனுக்கு எதிர்புறத்தில் ஒரு கடையில் போளி வாங்கி சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவை மறக்க முடியவில்லை. அதே போல ஐயப்பன் கடைக்கு எதிரே ஒரு கடை .. அதிலும் காபியும் போளியும் சுவையாக இருக்கும்
mouth watering, not much color good
Yes, you are correct. From the appearance and taste, there seems to be no food colouring or additivies.
good to know :)