செயலி மூலமாக உள்ளூர் ஆட்டோ, டாக்சி பயணங்களை ஒரே சொடுக்கில் பதிவு செய்யும் வசதியை 2009ஆம் ஆண்டு கொண்டு வந்து புரட்சி செய்தது ஊபர். இதையே இந்தியாவில் அடுத்த ஆண்டில் செய்தது ஓலா. ஊபரின் வேகத்தையையும் சக்தியையும் பார்த்த பல நிபுணர்களும் அடுத்த சில ஆண்டுகளில் உலகளவில் மக்கள் சொந்தமாக வாகனங்களை வைத்திருக்கவே மாட்டார்கள்; எல்லாப் பயணங்களும் ஊபர், ஓலா மூலமாகவே இருக்கும் என்று ஆருடம் சொன்னார்கள். ஆனால், இந்தளவு பெரிதாக இருந்தவர்களைப் பின்னுக்குத் தள்ளி, கதையையே மாற்றி எழுதிய செயலி ராபிடோ (Rapido).
தொடங்கிய போது பெரிய சிக்கலாக இருந்தது என்னவென்று கேட்டபோது ‘முன்பின் தெரியாத ஆண் ஓட்டுநருக்குப் பின்னால் ஒரு பெண் அமர்ந்து பயணம் செய்வது, அதுவும் ஒரு சிறு நகரில் செல்வது என்பது கலாசார ரீதியில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. இதை மாற்றுவதே எங்களுக்கு இருந்த பெரும் சவால்’ என்றார் ராபிடோவின் நிறுவனர் பவன் குந்துபள்ளி.
தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


படித்த இளைஞர்கள் இப்படி புதுமையாக சிந்திப்பது அவர்களுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் நன்மை தருகிறது.
ராப்பிடோ ஐடியா பயணத்தையும் அதற்கான செலவையும் குறைத்துள்ளது.
உலகமே கைக்குள் அடங்கும் கைபேசி அதன் செயலியால் நன்மையும் பல செய்யமுடியும் யோசிக்க முடியும் என இளைஞர்கள் /பெண்கள் நிரூபிக்கின்றனர்.
உங்களால் பல புதிய செயலிகள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக பல தகவல்கள் எனக்கு கிடைக்கிறது..மிக்க நன்றி.