தமிழில் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவைப்) பற்றிய பாட்காஸ்ட் ஓடை (Sapien Geno) தொடங்கப் போகிறோம் என்றார் நண்பர்
ஷான். அதில் நீங்களும் நண்பர் திரு அருள் அவர்களும் தொடர்ந்து பங்கேற்றால் நன்றாகவிருக்கும் என்று கேட்டார். கரும்பு தின்னக் கூலியா என நினைக்கையில் மற்ற சேப்பியன் சங்கத்தினர்களுடன் ஓர் அறிமுக காணொலியும் ஏற்பாடு செய்தார். “சேப்பியன் ஜீனோ” என்ற பெயர் உருவானது, பெயர்க் காரணம் திரு சுஜாதா அவர்களின் பிரபலக் கதாபாத்திரம் என்று சொல்லவும் வேண்டுமா?
7 ஜூலை 2025 – AI News Podcast
அதன் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள முதல் அத்தியாயம். “செய்யறிவுச் செய்திகள்” என்ற தலைப்பில் நாங்கள் மூவரும் உரையாடியிருக்கிறோம். சுமார் பதினைந்து நிமிடங்கள் ஓடும் சுருக்கமான பதிவு. வரும் வாரங்களில் மேலும் சுவையான செ.நு. தகவல்களுடன் உங்களைச் சந்திக்க ஆவலாகவிருக்கிறோம். எந்தளவு ஆழத்திற்குத் தொழில்நுட்பம், நிரல்கள் தொடர்பாகச் செல்லலாம். இல்லை செயலிகள் அளவில், பயனர்களுக்கான விசயங்களைப் பேசலாமா என்ற உங்கள் கருத்துக்களைப் பகிரவும். நன்றி.
2 ஆகஸ்ட் 2025 – AI News Podcast
15 ஆகஸ்ட் 2025 – Deep Fake என்னும் பேரபாயம்
ரமாமணி என்ற பெயரில் உருவாக்கிப்பட்ட ஒரு போலி விஞ்ஞானியின் படம் கிட்டத்தட்ட 60 லட்சம் பார்வைகளைப் பெற்றது. இது போன்ற டீப் ஃபேக் படங்களும் வீடியோக்களும் உலகெங்கும் உலவத் தொடங்கியுள்ளன. அது குறித்த ஒரு விழிப்புணர்வாக நானும் நண்பர் திரு ஷான் அவர்களும் உரையாடும் காணொலி.
22 ஆகஸ்ட் 2025 – ஏஐ அமைத்துத் தந்த டேட்டிங் (Tinder)
டேட்டிங் செய்யவும் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. டிண்டர் (Tinder) என்கிற விரும்பியவர்களைத் தேர்வு செய்யும் செயலியை க்லாட் (Claude) ஏ.ஐ. பயன்படுத்தி இயக்கியுள்ளார் இலண்டன் பொறியாளர். இதைக் கொண்டு பல பெண்களோடு ஒரே சமயத்தில் உரையாடி தனக்கு ஏற்ற துணையைத் தேடும் வாய்ப்புகளை அதிகமாக்கிக் கொண்டுள்ளார்.
இதைப் பற்றிய இந்த வார “சேப்பியன் ஜீனோ”வில் ஏஐ செய்திகளில் பேசியுள்ளோம்.
1 செப்டம்பர் 2025 – ஒரு வரி சொன்னா செயலிகள் வரும்
என்ன வேண்டுமென்று ஒரு வரியில் சொல்லிவிட்டால் செய்யறிவு உங்களுக்கான செயலியை உருவாக்கித்தரும் என்கிறது கூகுள். அவர்களுடைய ஓபல் எனப்படும் பரிசோதனை முயற்சி இது பற்றியதுதான். அலிபாபாவின் க்வென் தன்னுடைய வீடியோ உருவாக்கும் மாடலை திறந்த நிலை மென்பொருளாக வெளியிட்டுள்ளது. திரைப்படங்களை உருவாக்க அவை பயன்படலாம். மேலும் சில சமீப செய்திகள்.
23 செப்டம்பர் 2025 – Zoho’s Own AI | GPT 5
சமீபத்திய ஏஐ செய்திகள். GPT-5 பற்றிய தகவல்கள், கேரளா உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு, ZOHO-வின் Zia AI உள்ளிட்ட புதுமையான அப்டேட்கள் பற்றி எளிய தமிழில் விளக்குகிறோம். ஏஐ உலகை அறிய விரும்புவோருக்கான சுருக்கமான செய்தி தொகுப்பு.
2 நவம்பர் 2025 – போட்டோஷாப்பை அழிக்கும் ஏஐ
ப்ராம்ப்ட் செய்ய மொழி இனி ஒரு தடையாக இருக்காது. எல்லா செய்யறிவு மாடல்களும் இனிமேல் பல மொழிகளில் இயங்கும். நானோ பனானா போன்ற செயலிகளால் போட்டோஷாப் அழிந்து விடுமா? இது போன்ற பல சுவாரசியமான செய்திகளுடன் உங்களுக்காக செய்யறிவுச் செய்திகள்.
23 டிசம்பர் 2025 – கிறிஸ்டியானோ ரொனால்டோ பர்ப்ளெக்சிடி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்
கடந்த ஒரு மாதத்தில் ஏஐ உலகத்தில் நடந்த நிகழ்வுகளை செய்தியாக்கியிருக்கிறோம். கிறிஸ்டியானோ ரொனால்டோ பர்ப்ளெக்சிடி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். சேட்ஜிபிடியின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன் கூகுள் நிறுவனத்தின் போட்டியை உணர்ந்து ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறார். இன்னும் பல செய்திகள்.
#AINEWS #SAPIENGENO
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

