“யெமனின் ஹூதி போராளிகளுக்கு எதிரான தாக்குதல் திட்டங்களை அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்க்கும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்க்கும் இந்தச் செயலியின் மூலமாகவே பகிர்ந்துள்ளார். இப்படி அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளால் போர் விவரங்கள் உரையாடும் அளவு பாதுகாப்பானது, ”சிக்னல்” என்கிற அரட்டைச் செயலி. வாட்ஸ்ஆப் செயலியில் ரகசியமாக அரட்டையடிக்கப் பயன்படுத்தப்படும் சிக்னல் மறையாக்கு நெறிமுறையின் தோற்றம் இந்த சிக்னல் செயலியே. இதன் வரலாற்றை இங்கே தெரிந்து கொள்வோம்.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை ஒரு மென்பொருள் பரத்தையாக (சைபர்பங்க்) அடையாளப் படுத்திக் கொண்டவர் மோக்ஸி மார்லின்ஸ்பைக் (Moxie Marlinspike). அதற்கேற்ப அந்தக் காலங்களில், பின்னப்பட்ட குதிரைவால் முடியோடு இருக்கும் இவருடைய மேடைப் பேச்சுகளை இன்றும் யு-ட்யூப்பில் பார்க்கலாம். அமெரிக்காவின் ஜார்ஜியாவில் 1980களில் பிறந்தவர் மோக்ஸி. இங்கே 80களில் என்று மட்டுமே சொல்லியுள்ள காரணம் இவர் தனது தனிப்பட்ட விவரங்களை வெளியிட விரும்புவதில்லை, அதை ரகசியமாக வைத்துள்ளார். தன்னை போலவே எல்லோரும் அவர் அவர்களின் அந்தரங்க விவரங்களைப் பாதுகாப்பது அவசியம், அது அவர்களது அடிப்படை மனித உரிமை என்பதில் தீவிரமான நம்பிக்கையுள்ளவர் மோக்ஸி.
〰️〰️〰️
சிக்னல் தொடங்கி பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பிரபலமாகவும், தொடர்ந்து மேம்படுத்தப்பட்டும் வருவதற்கு மறையாக்கு முறையைத் தாண்டி காரணமாக இருப்பது இரண்டு. ஒன்று, தொழில்நுட்பச் சிக்கல்களைப் பயனர்களின் தோளில் சுமத்தாமல் பின்னணியில் இயங்கும் நிரலிகளே பார்த்துக் கொள்வது. இரண்டாவது, அவர்களின் செயலில் இருப்பது நேர்மையான பயனர் இடைமுகம் என்கிறார்கள். அதாவது செயலியில் பயனர்களுக்கு என்ன காட்டப்படுகிறதோ அதுவே உண்மையாகப் பின்னணியிலும் கையாளப்படுகிறது. பயனர்களுக்குத் தெரியாமல், திருட்டுத்தனமாக எந்தத் தகவலோ, மேல் தகவலோ சிக்னல் அமைப்பு எடுத்துக் கொள்வதில்லை. சிக்னல் இந்த இரண்டு முரண்களையும் சமனாகக் கையாள்கிறது”.
முழுவதையும் படிக்க இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையைப் பார்க்கவும். #signalapp
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

