நேற்று மாலை வந்த செய்தியைப் பார்க்கவே பயமாக இருந்தது. அங்கே இருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் காட்சிகளை/தகவல்களைக் கேட்கக் கோபமாக வருகிறது. நடந்த கொடுமையை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
சோமாலியா, யெமன், இஸ்ரேல், காசா, உக்ரைன், இப்போது நமக்கு மிக மிக அருகில். இன்னுமா அழகான காஷ்மீரில் இவை நடக்க வேண்டும்? இறந்தவர்கள் செய்த தவறு/பாவம் என்ன?.
இந்த வன்முறைகள் எங்குமே நடக்கக் கூடாது. தனி மனிதனாக இவற்றைத் தடுக்க என்ன செய்வதென்று தெரியவில்லை.
இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன். அதோடு இறைவனை உலக அமைதிக்கும் வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

