Google Gemini 2.0 Flash-Experimental

கூகுள் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் ஒரு புது பெரிய மொழி மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. சோதனை முறையில் வந்திருக்கும் Google Gemini 2.0 Flash-Experimental என்கிற இந்த மாதிரி பன்முகத்திறன் (மல்டிமோடல்) கொண்டது. இது வரை பொதுவெளியில் நாம் பயன்படுத்திய மாதிரிகள் எழுத்து வரிகளை, படங்களைப் புரிந்து கொள்ளும். விடைகளையும் வரிகளாக, படங்களாகக் கொடுக்கும். ஆனால் நாம் கொடுத்த படத்தில் சிறு மாறுதல்களைச் செய்து, விடையை இன்னொரு படமாகக் கொடுக்கச் சொன்னால் திணறும். அதே போலப் படங்களினுள் வார்த்தைகளை எழுதச் சொன்னால் எழுத்துப்பிழை வரும். இதைச் சரியாகச் செய்யும் திறன் கொண்டது இந்த புது மாதிரி.

“Google Gemini 2.0 Flash-Experimental” மாதிரிக்கு இயல்பான பட உருவாக்கும் திறன் இருப்பதாகக் கூகுள் சொல்கிறது. இதனால் நாம் இடும் கட்டளைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, சொன்னபடி செய்யும் இந்த மாதிரி. அதோடு நீங்கள் படக்கதை எழுதுகிறீர்கள் என்றால் முதல் படத்திலிருந்து கடைசி படம் வரை, கதாபாத்திரங்களும் சூழலும் ஒரே மாதிரி வரும் வகையில் படங்களை உருவாக்கக்கூடியது இந்த மாதிரி.

இதைக் கொண்டு ஒன்றிரண்டு சோதனை முயற்சிகள் செய்தேன். முதலாவதாக என் வீட்டில் நான் இருக்கும் படத்தைக் கொடுத்து, அமெரிக்காவில் ஒரு நவீனக் கணினி அலுவலகத்தில் இருப்பது போல மாற்றவும் என்றேன் – ஓரளவு நன்றாகச் செய்தது, ஆனால் காமிரா கோணத்தை மாற்றியிருந்தது, என் முதுகு தெரிவதாக வந்திருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அடுத்தது, சென்ற ஆண்டு நான் அந்தமான் தீவுகளில் ரம்மியமான கடற்கரை மணலில் எடுத்துக் கொண்ட தற்படத்தைக் கொடுத்து, இமாலய மலையின் அடிவாரத்தில் எடுத்த மாதிரி மாற்றச் சொன்னேன், கூடுதலாக அங்கே அணியும் குளிர் மேல்சட்டையையும் சேர்க்கச் சொன்னேன். இந்த முறை “ஜெமினி ஃப்ளாஷ் 2.0 சோதனை” உருவாக்கிய படம் நன்றாக, உண்மையில் அங்கேயே எடுத்தது போல் வந்திருக்கிறது. இணைப்பில் இருக்கும் படங்களைப் பார்க்கவும்.

Source: Venkatarangan in Andaman, real picture
Source: Venkatarangan in Andaman, real picture
Output: AI-generated image of Venkatarangan with a winter jacket near Himalayas base camp.
Output: AI-generated image of Venkatarangan with a winter jacket near Himalayas base camp.
Source: Venkatarangan in my home office, real picture
Source: Venkatarangan in my home office, real picture
Output: AI-generated image of Venkatarangan in a bay area computer office.
Output: AI-generated image of Venkatarangan in a bay area computer office.

இதைப் பயன்படுத்திப் பார்க்க உங்களிடம் “Google AI Studio” தளத்தில் ஒரு கணக்கு வேண்டும் – உங்கள் சாதாரண ஜி-மெயில் கணக்கை வைத்த இதைத் தொடங்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவு வரை இலவசமாகவே பயன்படுத்தலாம். முயற்சி செய்து பார்க்கவும்.

The Prompt I used in Google AI Studio
The Prompt I used in Google AI Studio

#GoogleGeminiAI #geminiflash #GenerativeAITools


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading