நான் கொடுத்துள்ள படத்தைப் பார்த்து அந்த வரைகலை முறையில், அதே வண்ணங்களில், அந்த ஓவியரின் படைப்பு சாயலில் புதிதாக ஒன்றை வரையவும் என்று ChatGPT 4oவிடம் சொன்னேன். புதிதாக வரையும் படத்தில் பூங்காவில் ஒரு சிறுவனும் சிறுமியும் பந்து விளையாடுவதைப் போல வரையவும் என்றேன். வந்துள்ள விடையை இணைப்பில் பார்க்கவும். நான் மூலமாகக் கொடுத்த படம் 1960களில் வெளிவந்த லிப்கோ நிறுவனத்தின் ஒரு நூலின் அட்டைப்படம்.
இதே உள்ளீட்டைக் கூகுள் ஜெமினி ஃப்ளாஷ் 2.0 பயிற்சி மாதிரியிலும் கொடுத்தேன். அது சுமாராகத் தான் வரைந்தது.


அடுத்ததாக ChatGPTயில் காமிக்ஸ் முறையில் ஒரு நகைச்சுவைப் படத்தை வரையவும் என்று சொன்னேன். அதற்கு ஓரளவுக்கு வேடிக்கையான படத்தை வரைந்து தந்தது. வரும் காலங்களில் இதன் தரம் மேம்படும் என்று நம்புகிறேன்.

ஏப்ரல் 9, 2025
கடந்த சில தினங்களாகப் பலரும் சாட்-ஜிபிடி’யைக் கொண்டு தங்களின் அக்ஷன் பிகர் பொம்மைகளாக வரைய வைத்துப் பகிர்கிறார்கள். பொருத்துப் பார்த்து இன்று நானும் ஜோதியில் கலந்துவிட்டேன். ஒன்றோடு நிறுத்தாமல் இரண்டு படங்கள், இரண்டு விதமான பிராம்ப்ட்களைக் கொடுத்து வரையச் சொன்னேன். அடுத்தது இவற்றை 3டீ பிரிண்டிங் செய்து, பொம்மைகளாக விற்று, குழந்தைகளை அழவைக்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.


#ActionFigure #chatgpttrend
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

