பேசிக் நிரலாக்க மொழியின் தந்தை

பேராசிரியர் தாமஸ் குர்ட்ஸ் அவர்களுக்கு அஞ்சலி (1928-2024). கணினி உலகத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் தாமஸ் குர்ட்ஸ் அவர்கள் நவம்பர் 12, 2024 அன்று, தனது 96-ஆவது வயதில் நம்மை விட்டுப் பிரிந்தார்.

1964-ல் BASIC நிரலாக்க மொழி வெளியான போது, உலகத்தில் வெறும் நான்கு உயர்நிலை நிரலாக்க மொழிகள் (FORTRAN, ALGOL, LISP, மற்றும் COBOL) மட்டுமே இருந்தன. Pascal, Smalltalk, C போன்ற மொழிகள் எல்லாம் வர பல ஆண்டுகள் ஆனது.

1989ஆம் கோடை விடுமுறையில், நான் பள்ளியில் படிக்கும் போது, முதன் முதலாகக் கற்றுக்கொண்ட நிரலாக்க மொழி இதுதான். பின்னர் பல ஆண்டுகள் Visual Basic-ல் வணிக மென்பொருட்களை உருவாக்கினேன். இதற்குப் பின்னர் நான் Assembly மொழியிலிருந்து ஆரம்பித்து சுமார் பத்து நிரலாக்க மொழிகளைக் கற்றிருப்பேன், ஆனால் அனைத்துக்கும் ஆரம்பம் பேசிக் தான்.

லட்சக்கணக்கான மக்களுக்கு நிரலாக்கத்தின் கதவுகளைத் திறந்து விட்ட பேராசிரியர் குர்ட்ஸ் அவர்களுக்கு நன்றி. BASIC மூலம் நிரலாக்கம் கற்ற அனைவரின் ஒவ்வொரு வரி நிரலிலும் நீங்கள் இருப்பீர்கள். ️

 


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading