Deepavali 2024 Firecrackers purchase

நான் கடைக்குப் போய் டப்பாசு வாங்கி வருடங்கள் ஆகிவிட்டது. கல்லூரி முடிக்கப் போகும் என் பையனும் சிறு வயதிலிருந்தே பட்டாசு வெடிக்க மாட்டான், சுற்றுச்சுழல் மாசு ஆகும் என்பதால்.

இந்த ஆண்டு, நாளை தீபாவளிக்கு வெடிக்க எதுவுமே இல்லை என்று மாலை 8:30க்கு கண்டு கொண்டு, அருகில் இருக்கும் கடைத் தெருவுக்குப் போனால் எங்கேயுமே இப்பொழுதெல்லாம் பட்டாசு விற்பனை கிடையாதாம். சரி என்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் போடப்பட்டிருந்த ஸ்டாண்டார்டு கண்காட்சியில் போய் இரண்டு கட்டுக் கம்பி மத்தாப்பு பெட்டிகள் வாங்கி வந்தேன்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் சிறுவனாக இருந்த போது சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஏகப்பட்ட பட்டாசுக் கடைகள் இருக்கும், இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னரே கடைகள் வந்துவிடும், தீபாவளிக்கு முன்னர் வரும் நாட்களில் கூட்டம் அலை மோதும், திருவிழா கொண்டாட்டமாக இருக்கும். சில சமயம் என் அப்பாவின் சிபாரிசு கேட்டு அவருக்குத் தெரிந்த கடையில் வாங்கிப் போவோரும் உண்டு.

இன்றைக்கு நான் வாங்கியது, மொத்தமாக வெறும் பத்துப் பெட்டிகள் சிறியளவு கம்பி மத்தாப்புகள். விலை அதிகமில்லை ஜென்டில்மேன், லேடிஸ் ஆயிரத்து ஐநூற்றி முப்பத்தி நான்கு ரூபாய் (1534). நிச்சயம் விலைவாசி எங்கேயோ போய்விட்டது!

Standard Red Sparkles
Standard Red Sparkles

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading