இந்த வாரம் வெளிவந்துள்ள ChatGPT4o மாதிரியில் தமிழ் மொழியில் கொடுக்கப்படும் ப்ராம்ப்டும் (உள்ளீடு) அதற்கு அது கொடுக்கும் பதில்களும் முழுமையாக இல்லாவிட்டாலும், முன்பைவிட மேலாகவிருக்கிறது. வெகு விரைவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிடும். முன்பு ChatGPTயில் இருந்த டோக்கன் அளவு பிரச்சனையும் தற்போது மூன்று புள்ளி மூன்று மடங்கு தமிழுக்குக் குறைக்கப்பட்டுள்ளது, இதனால் தமிழ் விடைகள் முன்பைவிட வேகமாக வருகிறது, நம் செயலிகளிலிருந்து இந்த மாதிரிகளை (API வழியாக) அழைக்கும் போது அதற்கான செலவும் குறையும்.

நான் கொடுத்த உள்ளீடும் அதற்கானப் பதிலும் கீழே:

சென்னை வெயில் மோசமாக இருந்தது அதனால் நான் நேற்று இரவு ஐஸ்கிரீம் உண்டேன். இதை வைத்துக் கொண்டு ஒர் நகைச்சுவைக் காட்சியை நடிகர் வடிவேல் பாணியில் சொல்ல முடியுமா?. நன்றி.

Prompt and response in Tamil from ChatGPT-4o model

Prompt and response in Tamil from ChatGPT-4o model