கடந்த ஒரு வாரமாக என்னுடைய ஐபோனில் வாட்ஸ்அப் தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது. எல்லா அரட்டைகளையும் படித்துவிட்டேன். ‘படிக்காதவை’ (Unread) என்ற பொத்தானைத் தட்டி, அதில் எதுவும் இல்லை என்றும் உறுதி செய்துவிட்டேன். இருந்தும் ஒரு அரட்டையை நீங்கள் படிக்கவில்லை என்ற அந்தப் பச்சை நிறச் குறிவில்லையைக் காட்டிக்கொண்டே இருந்தது.

📬 → 📭 நான் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கியது முதற்கொண்டு, தினம் தினம் என்னுடைய எல்லா மின்னஞ்சல்களையும், குறுஞ்செய்திகளையும், அரட்டைகளையும் படித்துவிடும் வழக்கமுள்ளவன். அன்றைக்குப் படிக்க முடியவில்லை என்றால், அவற்றை என்னுடைய ‘செய்ய வேண்டிய’ பட்டியலில் (To-do list) குறித்துக்கொண்டு, படித்துவிட்டேன் (Read) என்று மாற்றிவிடுவேன். இதை ஆங்கிலத்தில் ‘ஸீரோ இன்பாக்ஸ்’ முறை என்பார்கள். சிலரோ இதை ஒருவித ‘கட்டாய மனப்பிறழ்வு’ (OCD) என்றும் சொல்லலாம்.

இந்த ஒரு படிக்காதவை அறிவிப்பு என்னைக் கவலைப்படுத்திக்கொண்டே இருந்தது. எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டேன், ஆனாலும் வாட்ஸ்அப் பிடிவாதமாக அதை மாற்றிக்கொள்ளவில்லை.

Unread badge in WhatsApp for iPhone - April 2026
Unread badge in WhatsApp for iPhone – April 2026

சரி, இதை இன்றே சரி செய்தே ஆக வேண்டும் என்று என்னுடைய ஐபோனில் வாட்ஸ்அப் தரவுகளைக் சேமித்துவிட்டு (Backup), செயலியை முழுவதுமாக நீக்கி அழித்துவிட்டேன். மீண்டும் பதிவிறக்கிக்கொண்டு, என்னுடைய கணக்கைப் புதிதாக ஏற்றிப் பார்த்தால், இப்பொழுது எந்த அரட்டையும் படிக்கவில்லை என்று சமத்தாகச் சொல்லுகிறது.

உலகை ஆளக்கூடிய செயற்கை நுண்ணறிவு வந்தால் கூட, நம்முடைய கணினியிலும் செல்பேசியிலும் மென்பொருட்கள் அவ்வப்பொழுது இப்படி மக்கர் செய்து கொண்டுதான் இருக்கும். அது மக்கர் செய்யும் வரை மனிதர்களுக்கு என்றுமே வேலை இருக்கும். நன்றி!


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading