80களில் இந்தியாவில் ஆங்கர் மின் சுவிட்ச்கள் (சொடுக்கிகள்) தான் பிரபலம். அதற்கு முன்னர் பீங்கான் மற்றும் பித்தளையைக் கொண்ட குண்டான வட்டவடிவ சுவிட்ச்கள் இருந்தன. ஆங்கர் நிறுவன சுவிட்ச்கள் நெகிழியை (பிளாஸ்டிக்) கொண்டு சிறியதாகத் தயாரிக்கப்பட்டது. வந்த புதிதில் ஒவ்வொரு சுவிட்ச்சும் எதற்குப் பயன்படுத்துகிறோமோ அந்தச் சாதனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் – உதாரணமாக மின்விசிறி (Fan), குழல் (Tube), விளக்கு (Lamp) என்று ஒவ்வொரு சுவிட்ச்சின் மேல் இருக்கும், அதைப் பார்த்து எளிதாக நமக்கு வேண்டியவற்றை இயக்கிக் கொள்ளலாம். சில ஆண்டுகளில் பழுப்பு-வெள்ளை நிறத்தைத் தாண்டி சிகப்பு, நீலம் போன்ற வண்ணங்களிலும் சுவிட்ச்சுகள் வெளிவந்தது, அவையும் ஒவ்வொரு சுவிட்ச்சின் பயனையும் அடையாளம் காண வசதியாக இருந்தது.

Vintage Porcelain Switches

Vintage Porcelain Switches

Anchor Plastic Switches with Fan, Lamp and Tube markings

Anchor Plastic Switches with Fan, Lamp and Tube markings

ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக நவீன, அதீதமில்லாத கட்டடக்கலை முறைகள் வந்ததிலிருந்து, “ரோமா” போன்ற சுவிட்ச்சுகள் தான் வருகிறது. இந்த வகை சுவிட்ச்சுகள் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும், அது தான் அதன் சிறப்பு என்று கூறப்படுகிறது. இப்படியான வடிவமைப்புகளை ஆங்கிலத்தில் “Form over function”, அதாவது “செயல்பாட்டை விடத் தோற்றத்திற்கு முக்கியத்துவம்” என்று சொல்லுவார்கள். இந்த வகை சுவிட்ச்சுகள் தான் என் வீட்டிலும் இருக்கிறது, நம் அறையின் மின்விசிறியின் சுவிட்ச்சு எது, விளக்கின் சுவிட்ச்சு எது என்று வந்த ஓரிரு நாளில் பழகிவிடும், ஆனால் வீட்டில் மற்ற அறைகளின் சுவிட்ச்சுகள் அந்தளவு நினைவில் இருக்காது, எது என்று போட்டுப் போட்டுப் பார்த்து அணைக்க வேண்டும், ஒவ்வொரு முறை இப்படிச் செய்வது கடுப்பாக இருந்தது. சமீபத்தில் அமேசான் தளத்தில் “Switch ID stickers” என்று வெள்ளை சுவிட்ச்சுகளின் மேல் ஒட்டக்கூடிய ஒட்டிகள் (ஸ்டிக்கர்கள்) கிடைத்தது. நூற்றுமுப்பது ஒட்டிகள் சுமார் 170 ரூபாய்க்கும், ஐந்நூறு ஒட்டிகள் முந்நூறுரூபாய்க்கும் கிடைக்கிறது. வாங்கி, தேவையான அறைகளின் சுவிட்ச்சுகளில் ஒட்டிவிட்டேன், வசதியாக இருக்கிறது.

உங்களின் பார்வையில் எப்படி இருக்கிறது?

ID Stickers for Household electrical Switches

ID Stickers for Household electrical Switches

#switches #roundswitches #switchstickers #AmazonIndia

Tagged in:

,