கறுப்பு வண்ணத்தில் சாதாரண உடை, தனக்குப் பின்னால் இருக்கும் திரையில் கறுப்பு வண்ணக் காட்சி, அதில் ஒரு சில வார்த்தைகள் வெள்ளை நிறத்தில் அவ்வளவு தான். ஆனால் அரங்கில் இருக்கும் அனைவரும், அதை காணொலியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் அவர் விற்கும் எந்தக் கணினியையும் எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்க இரவு பகலாக வரிசையில் நிற்பார்கள். அந்த மாதிரியான வசீகரப் பேச்சாளர் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால், நாமெல்லாம் அவரை மாதிரி கருப்புநிறக் காட்சிகளை மட்டும் வைத்துக் கேட்பவரின் கவனத்தை ஈர்க்க முடியாது. நமக்குத் தேவை ஜொலிக்கும் விளக்கக் காட்சிகள், அதைச் செய்யச் சிறந்த செயலி இன்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில் வரும் மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் தான்.

தற்போது மைக்ரோசாப்ட் 365 என்கிற சந்தா மூலமாக வருவது நம் அப்பா காலத்து மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் கிடையாது. கடந்த சில ஆண்டுகளில் பல நூறு புது வசதிகள் இதில் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (8 மார்ச் 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

 

Categorized in:

Tagged in:

,