இன்று காலை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. வேலை நாள் மற்றும் வெயில் காலம் என்பதால் கூட்டமே இல்லை, நல்ல ஏகாந்தமான தரிசனம். மலைக்கு மேல் போகும் சாலையைச் சமீபத்தில் சீரமைத்திருக்கிறார்கள். கோயிலும் படுசுத்தமாக இருக்கிறது. மதுரை நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோயில், 108 வைஷ்ணவ திவ்வியதேசத்தில் ஒன்றானதும் கூட. நிச்சயம் சென்று சேவிக்க வேண்டிய திருத்தலம்.
திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இருக்கும் அற்புதமான கல் தூண்கள். பல்வேறு வடிவில் யாளி, அன்னப்பட்சி, எட்டு கைகளில் சங்கு, சக்கரம், மற்ற ஆயுதங்களோடு புல்லாங்குழல் ஊதும் மகாவிஷ்ணு என்று பல அழகான சிற்பங்கள். அடுத்த முறை செல்லும் போது தவறாமல் பார்க்கவும்.

மலைகள் சூழ்ந்த ரம்மியமான இடத்தில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் உள் கோபுரம்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் உள் கோபுரம்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் பசு மடம்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையம்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வாயில் – இடது பக்கத்தில் ஸ்ரீ கருடர் வலதில் ஸ்ரீ அனுமார்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் முன் தி.ந.ச.வெங்கடரங்கன்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் ஸ்ரீ இராமானுஜர் சன்னதி

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் திருக்கல்யாண மண்டபக் கல் தூண்கள்

யாளி

பல்வேறு வடிவில் யாளி

அன்னப்பட்சியின் மேல் மங்கை

எட்டு கைகளில் சங்கு, சக்கரம், மற்ற ஆயுதங்களோடு புல்லாங்குழல் ஊதும் மகாவிஷ்ணு
#kallalagar #kallalagartemple #madurai #hindutemples #tamilnadutemples #sculptures
Comments