இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் வந்த எனது கட்டுரை எதைப் பற்றியது என்றால்: இந்த புத்தாண்டு கொண்டு வரப்போக்கும் புது நுட்பங்களைப் பேசும் அறிமுகக் கட்டுரை. 5-ஜி, தோற்ற மெய்ம்மை (Virtual reality), சாட்-ஜி-பி-டி (ChatGPT) மற்றும் செயற்கை நுண்ணறிவு கலைகள் எனப் பல விஷயங்களை இதில் நீங்கள் படிக்கலாம். பிதற்றொலிகள் கிடையாது.

முழுக் கட்டுரையும் ஒரு மாதச் சுலப (₹75) சந்தா எடுத்துப் படிக்கலாமே?

இந்தக் கட்டுரையை எழுதும் போது ஓர் இடத்தில் “பீட்ஸா அளவுடைய” கணினி (Pizza sized box) என்று சொல்ல வேண்டும், ஏதோ நெருடியது, தமிழுக்கு அந்நியமாக தோன்றியது. அப்போது தான் வீட்டில் வைகுண்ட ஏகாதசிக்காகச் சுடச் சுட இட்லியும், கேசரியும் வாழை இலையில் சாப்பிட்டது நினைவில் வர, பிடித்துவிட்டேன் சரியான வாக்கியத்தை – “சாப்பாட்டு இலை” போல என்று. எப்படி இருக்கிறது?