மாபெரும் வெற்றி பெற்றுள்ள த.வெ.க. மற்றும் அவர்களின் தலைவர் திரு விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவரோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்க்கும் வாழ்த்துகள்.

எல்லோரும் அவர்கள் எப்பொழுதோ திரு விஜய்யோடு எடுத்த படங்களைப் பகிர்கிறார்கள். நானும் அப்படிச் செய்யவில்லை என்றால் எடுத்த படம் பயனற்றுப் போகும் என்கிற காரணத்தால் மட்டுமே பகிர்கிறேன். நண்பா நண்பிஸ் தயவுசெய்து நம்பவும் :-)

10 மே 2026:
மாண்புமிகு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு ச ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவரின் அமைச்சரவைக்கும் வாழ்த்துகள்.

அவர் கூறியது போல எட்டுக் கோடித் தமிழக மக்களின் ஆட்சியாக இது இருக்கும்; நல்லாட்சி வழங்குவார் எனத் தமிழனாக, இந்தியக் குடிமகனாக நானும் நம்புகிறேன். கான்பிடன்ட்டாக இருப்போம்.

முதல் உரை அவரின் கட்சித் தொண்டரை ஈர்க்கும் வண்ணம் உணர்ச்சிகரமாக இருந்தாலும், அவரின் பார்வை சரிசமமாகவே இருந்தது. மக்கள் எதிர்பார்த்த அம்சங்கள் அதில் இடம்பெற்றது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

வாழ்க தமிழ்நாடு, வளர்க தமிழ், ஜெய் ஹிந்த்.
Venkatarangan Thirumalai with Actor Vijay in Frankfurt Airport (June 1999)
Venkatarangan Thirumalai with Actor Vijay in Frankfurt Airport (June 1999)

இந்தப் படம் ஜூன் 1999ஆம் ஆண்டு நான் அமெரிக்காவிற்குச் சென்றுகொண்டிருந்தபோது எடுக்கப்பட்டது. வணிக ரீதியான பயணம் என்பதால் எனக்கு வணிக வகுப்பு இருக்கை (Business class). என்னையும் சேர்த்து ஓரிருவர் மட்டுமே அந்த வரிசைகளில் இருந்தோம். வழியில் ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் (Frankfurt) நகரில் பயணியர் அனைவரும் இறங்கு முன்னர், முன் வரிசையில் இருந்த நாங்கள் ஏரோபிரிட்ஜில் (Aerobridge) நுழைந்தோம்.

எனக்கு முன்னர் நடிகர் விஜய் நடந்து கொண்டிருந்தார். எனக்கு அதிர்ஷ்டம், என் கையில் ஒரு பாக்கெட் காமிரா இருந்தது. அப்போதெல்லாம் செல்பேசிகள் அரிது, அவற்றிலும் படக்கருவிகள் இருந்தனவா என நினைவில்லை. கொஞ்சம் வேகமாகப் போய் விஜயிடம் கேட்டேன், உடனேயே சரி என்று சொல்லி, படம் எடுக்க அனுமதி அளித்தார் – அவருடன் கூட வந்தவர் என் காமிராவை வாங்கிப் படம் எடுத்தார் என்று நினைக்கிறேன்.

With Actress Ramba in Frankfurt Airport (June 1999)
With Actress Ramba in Frankfurt Airport (June 1999)

படத்தை எடுத்தவுடன் விஜய்க்கு நன்றி கூறித் திரும்பினேன். பார்த்தால் அந்நாள் கனவு நாயகி நடிகை ரம்பா அவர்கள் நடந்து வருகிறார்கள். அவர்களோடும் ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.

கீழே அடுத்து இருக்கும் படத்தின் விவரம்: என் ஆருயிர் நண்பன் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பாலவாக்கம் அருகே வசிக்கிறான். சில காலம் முன்னர், அவனோடு காரில் செல்லும்பொழுது ஒரு முறை விஜய் வீட்டின் வழியாகவும், இன்னொரு முறை த.வெ.க. அலுவலகம் வழியாகவும் சென்றோம். அப்போது இறங்கி நான் எடுத்துக்கொண்ட படங்கள்.

Feb 2022 (left) — Vijay’s residence; Feb 2026 (right) — TVK party office.
Feb 2022 (left) — Vijay’s residence; Feb 2026 (right) — TVK party office.

மீண்டும் ஒரு முறை விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள், வெற்றி பெற்ற அனைத்து மக்கள் பிரதிநிதியர்க்கும் வாழ்த்துகள்.

குறிப்பு: முதல்வர்கள் வரிசையில் நான் திரு கலைஞர் அவர்களுடன் ஒரே மேடையில் படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். செல்வி ஜெயலலிதா, திரு எடப்பாடி பழனிசாமி, திரு ஸ்டாலின் அவர்களை நேரில் பார்த்திருக்கிறேன்; ஆனால் படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்போ, உரையாடும் வாய்ப்போ கிடைத்ததில்லை.

Myself, seen doing the demo in தமிழ் of Microsoft Office 2003 Tamil LIP in front of Dr.Kalaignar Karunanidhi,
Myself seen doing the demo in தமிழ் of Microsoft Office 2003 Tamil LIP in front of Dr Kalaignar Karunanidhi,

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading