சமீபத்தில் என் ஐபோனின் சிம் கார்டை ‘இ-சிம்’மாக, அதாவது சிலிகான் அட்டையாக இல்லாமல் மென்பொருளாக மாற்ற ஒரு தொலைபேசி நிறுவனத்தின் கடைக்குச் சென்றேன். என் ஆதார் அட்டை, ஆள்காட்டி விரல்ரேகை, புகைப்படம் என்று (பாஸ்போர்ட் புதுப்பிப்பில் கேட்கும் தகவல்களை போன்று) யாவற்றையும் விரிவாகக் கேட்டு இருபது நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டு செய்து முடித்தார்கள். நான் பொறுமையாகக் காத்திருந்தேன். வேலை முடிந்தவுடன் அந்த ஊழியரிடம் நன்றி கூறினேன். அவர் ஆச்சரியத்துடன், “பொதுவாக இந்த அளவுக்கு நாங்கள் கேள்வி கேட்பதற்கு எல்லோரும் கோபித்துக் கொள்வார்கள். நீங்கள் ஒருவர்தான் சிரித்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் பதில் கொடுத்தீர்கள்!” என்றார். ஏன் பொறுமையுடன் இருந்தேன் என்பதற்கான காரணத்தை இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் வந்துள்ள எனது கட்டுரையில் படிக்கலாம்.

நினைவில் கொள்க, செல்பேசியின் ஆத்மா என்பது அதன் சிம்-கார்டு. அதை பாதுகாப்பது நம் பொறுப்பு.

#simcard #safety

Categorized in:

Tagged in:

, ,