புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது, என்று பாடி ஆடிக்கொண்டே சிம்லாவை வலம் வரும் எம்.ஜி.ஆரின் கையில் இருக்கும் அந்த சிவப்புப் பெட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. அவர் போவது அவரது சொந்த மாளிகைக்கு. அங்கே அவருக்குத் தேவையான அனைத்தும் – மாற்று துணி உட்பட – தயாராக இருக்கும். அதனால் புரட்சித்தலைவருக்கு அந்தச் சிறிய கைப்பெட்டி போதும். நமக்கெல்லாம் அப்படியா?

போகுமிடங்களில் தேவையானவற்றை முன்கூட்டியே யோசித்து மூட்டை கட்டிக் கொண்டு செல்லவேண்டும். இப்போதெல்லாம் அந்தப் பட்டியலே செல்பேசிக்குத் தேவையானவற்றில் இருந்து தொடங்குகிறது – செல்பேசி மற்றும் அதன் மின்னேற்றி (சார்ஜர்). அவ்வளவு தானே, இது என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா?

குப்பைக்கும் பயனுண்டு
வெளியூர் போன இடத்தில் செல்பேசி காணாமல் போனாலோ, உடைந்து போனாலோ நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. வாடகைக் காரை அழைக்க முடியாது, இரயில் டிக்கெட்டை பரிசோதகரிடம் காட்ட முடியாது, போகும் இடத்திற்கு வழி தெரியாது என்று அப்படியே விறைத்துப் போய் விடுவோம். இதைத் தவிர்க்க மாற்று செல்பேசி எப்போதும் என் பயணங்களில் உடனிருக்கும்.

இதற்காக நான் தனியாகச் செலவு செய்வதில்லை – சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புது செல்பேசி வாங்கும் போது, பழையதைத் தூக்கியெறியாமல் அதை இரண்டாவது (மாற்று) செல்பேசியாக வைத்துக் கொள்வேன்.

தொடர்ந்து படிக்க: இன்றைக்கு வெளிவந்துள்ள மெட்ராஸ் பேப்பர் கட்டுரை. படித்துப் பார்த்து கருத்தைப் பகிரவும்.

Tagged in: