திடீரென்று ஒரு பாடலை, நமக்கு பிடித்த ஒரு பாடலை, பல ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கும்போது அது நம்முள் உருவாக்கும் ஒரு உணர்வே அலாதியானது. அப்படித்தான் 1989யில் வெளிவந்த ரஜினிகாந்தின் ராஜாதி ராஜா படத்தில் இருந்து இந்தப் பாடலை இன்றைக்கு கேட்டபோது, நான் என் பள்ளி காலத்துக்கு சென்ற மாதிரி ஒரு உணர்வு. யோசித்து பார்த்ததில் எதற்காக இந்த பாடலை பிடிக்கும், எதனால் இந்தளவு எனக்குள் தாக்கம் என்று குறிப்பிட்டு எந்த காரணமும் சொல்ல முடியவில்லை – உங்கள் கற்பனை குதிரையை தேவையில்லாமல் ஓட விட வேண்டாம்.

இந்த பாடலில் ரஜினி எதார்த்தமாக நடந்து/ஆடிக்கொண்டே வருவதால் பிடித்து இருக்கலாம், அவர் தலைமுடியை கோதி விடும் விதமே ஓர் அழகு அதனாலும் பிடித்து இருக்கலாம். பாடலில் வரும் காட்டுப்பகுதியும் அங்கேயிருக்கும் பசுமையும் அமைதியான அழகு. பாடல் வரிகளும் எளிதாக விளங்கும்படி இருக்கும், மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை இந்தப் பாடலில் அலாதியானது. நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.

மலையாளக் கரையோரம் – ராஜாதி ராஜா (1989)
#Spotify #raajarules #Ilaiyaraaja #Rajinikanth #songs

Categorized in:

Tagged in: